கோவை சிறை முற்றுகை

Vinkmag ad

100 நாட்கள் காத்திருப்போம் என மஜக அறிவிப்பு

கோவை சிறை முற்றுகை

100 நாட்கள் காத்திருப்போம் என மஜக அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 10 ஆண்டுகளை நிறைவு செய்து ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் தமிழக அரசு சாதி மத வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (08.01.2022) கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்த இந்நிகழ்விற்கு பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, Ex.MLA தலைமை தாங்கினார்.

இப்போராட்டத்தில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, Ex. MLA, 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தோழர் தியாகு, வழக்கறிஞர் பவானி மோகன், கேரள மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் அனூப், மெரினா போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜலீல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்,

இப்போராட்டத்தில் கோவை பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள்தண்டனை சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய வேண்டும் எனவும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு 161 வது சட்ட பிரிவை பயன்படுத்தி இவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் என்றும் இதற்காக இன்றிலிருந்து 100, நாட்கள் காத்திருப்பது என்றும் தாமதமானால் அடுத்தகட்ட ஜனநாயக போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வெளிமாவட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அதையும் கடந்து மக்கள் முக கவசங் களோடு, திரண்டிருந்தனர்.

மஜக இளைஞர் அணியின் சார்பில் மக்களை நெறிப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது, அதுபோல மஜக மருத்துவ சேவை அணியின் சார்பில் ஆம்புலன்ஸ் சேவைகளும், மருத்துவ குழுக்களும், தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

மஜக தகவல் தொழில்நுட்ப அணியினர் நிகழ்ச்சிகளை வலைதளங்களின் வழியாக துல்லியமாக நேரலையாக ஒளிபரப்பினர்.

வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த மக்களுக்கு புறநகர்ப் பகுதியில் ஓய்விடங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் காலை தேவைகளை நிறைவு செய்யும் வசதிகளும் தரப்பட்டிருந்தது.

மேலும் அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவிகள் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டு அதன் பிறகு அதன்பிறகு போராட்டக் களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் செய்யது அகமது பாரூக், மதுக்கூர் ராவுத்தர் ஷா, கோவை சுல்தான் அமீர், NA. தைமியா, நாச்சிகுளம் தாஜூதீன், ஆகியோருடன் மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணிச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், ஆகியோர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நிறைவாக மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ், நன்றியுரை கூறினார்.

News

Read Previous

கல்வி உதவித்தொகை

Read Next

அவன் தான் இறைவன்

Leave a Reply

Your email address will not be published.