பாடும் பறவைகள்

Vinkmag ad

செம்மொழி கவி உதயம்

தலைப்பு : –
பாடும் பறவைகள்

பாவலர் கூட்டம் மேவும் செம்மொழி
நாவலர் கூட்டம் கூவும் தேன்மொழி
பூவையர் குரலில் குழலாய் ஒலிக்கும்
பூமியில் தமிழனின் யாழாய் இனிக்கும்.
பாடும் பறவைகள் பாவலர் கூட்டம்,
நாளும் சேரும் நற்றமிழ் கோட்டம்,
மரபில் ஒன்று குயிலாய்க் கூவும்
மனதில் என்றும் மயிலாய் அகவும்,
அறியா இலக்கணம் ஆனவர் ஆகினும்
முறியா குரலில் அரிய கிளியாய்
கவிதைகள் பாடும் பறவைகள் ஓலியாய்.
புதுமைகள் செய்யும் தமிழில் நன்று.
பதுமைகள் போல காணும் அழகில்,
சோம்பலை பழிக்கும் சேவலைப் போல
மூடத்தை ஒழிக்கும் பறவையும் ஆகி
நாளும் கூவும் சேவல்கள் உண்டு
மேன்மை விடியல் செய்வதும் உண்டு.
சிட்டுகள் போல சேர்ந்திடும் பாவலர்
மெட்டுகள் போட்டு பாடும் பறவைகள்.
நட்டிடும் கவிதைகள் நாளைய பாடங்கள்,
வித்திடும் முளைகள் பறவையின் எச்சங்கள்.
கத்திடும் கருத்துக்கள் கவிஞனின் ஞானங்கள்.
சத்திடும் வேளையில் காணுமே இறையாய்.
பாடும் பறவைகள் பாவலர் இனங்கள்,
கூடியே வாழும் கொள்கை மனங்கள்.

மைசூர் இரா.கர்ணன்
08 .01 .2022

News

Read Previous

அவன் தான் இறைவன்

Read Next

காவல் துறை அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *