அமெரிக்கா- ஒரு பார்வை

Vinkmag ad

அமெரிக்கா- ஒரு பார்வை
——————————————

அமெரிக்கா அழகான நாடு
ஆற்றலும் வளமும் நிறைந்த நாடு
ஆச்சரியமான சுற்றுச்சூழல்
அதிசயமான காலமாற்றம்

வெண்பூவு பனித் தூவலில்
வெதுவெதுப்பான வென்னீர் குளியலில்
வெறுமையான மன பொதியில்
வெளிச்சம் தந்த மகிழ்ச்சி
மலரும் நினைவாய் பூத்தனவே

தென்மேற்கு பருவக்காற்றும்
தெறித்து அடித்த சாரலும்
தென்றலில் தவழும் இதமும்
தெளிந்த நீரோடையும் தராத
தெவிட்டாத இன்பம் இது தந்ததுவே

வண்ணமாய் பூத்த மர இலைகள்
வாடி விழுந்து போனாலும்
வறட்சி வந்து சேரவில்லை
வசந்தகால மலர்ச்சி சூழ்ந்தனவே

வான் வீதியில் மேகங்கள்
வரையும் ஓவியங்கள்.
வானுயர்ந்த மரக்கிளையில்
வந்து பனித்துளிகள் வரைந்தனவே

வெண்பஞ்சு மேகங்கள் வானில்
வழி தெரியாது அலைகையிலே
பூம்பஞ்சு பனிக்கற்கள் சாலையில்
புதிய பாதை படைத்தனவே
கட்டுப்பாடுகள் உள்ள நாடு
கடமையுணர்வு மிக்க நாடு
மனித ஒழுக்கத்தில் குறையிருந்தாலும்
மனித நேயம் மிளிரும் நாடு

நகரைச் சுற்றி நீரோடைகள்
நகரும் இடமெல்லாம் பரிசுத்தங்கள்
நாடு நல்ல நாடு தான்
நாட்டாமை என்று பிறநாட்டு
நலனில் தலையிடாத வரை

கவின் முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

இளையான்குடி கல்லூரி நிர்வாகக் குழு பதவியேற்பு விழா

Read Next

சும்மா’ இருப்பது…

Leave a Reply

Your email address will not be published.