சும்மா’ இருப்பது…

Vinkmag ad

‘சும்மா’ இருப்பது…”
…………………………..

”சும்மா இரு”,சும்மா சொல்கிறான், அவன் அங்கு போகவில்லை என்று ‘சும்மா’ சொல்கிறான், அவன் எப்போதும் ‘சும்மா’ தூங்கிக் கொண்டேயிருக்கிறான்.உங்களை ‘சும்மா’ பார்க்க வந்தேன். என்று சொல்வது நம்மிடையே காணப்படும் ஒரு பொது வழக்காகும்.

வேலையில்லாதவர்களையும், பணிஓய்வுபெற்றுள்ள முதியோர்களையும் நோக்கி,

“இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”என்று கேட்கும்போது”சும்மாதான் இருக்கின்றேன்!” என்று அவர்கள் விடையளிப்பதுண்டு.

‘சும்மா இருப்பதும்’ ஒருவகையில் சுகம்தானே!

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது .அதிகாரிகள் அவ் வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு நாள் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் .கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் .” சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு “.என்று தினசரி செலவு பட்டியலில் எழுதப்பட்டிருந்தது.

அதை பார்த்த அவர், ” சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ?

அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .
உடனே ஆலய ஊழியர்கள் ,அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் :”ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல … அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !”

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்க வில்லை

எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார்,வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

” சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !” முன்று பார்த்தார் .

மனம் அலைய ஆரம்பித்தது ….அடங்க மறுத்தது .சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முயன்றார் ‘ வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார். கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது .

கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்
மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது .
மகளுக்கு மாப்பிள்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்

திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்க்கிறார் மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

” மனம் – தியானம் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது ” என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது.

எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் ஆரம்பமாவதில்லை “அதிகாரி திணறி போனார் .

அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் ,உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது

அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார்.

” சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்ததுஉடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார்,

பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !”

ஆம்.,நண்பர்களே.,

”சும்மா இருப்பது என்பது மனதில் சும்மா இருப்பது…
மனம்.. நடந்து முடிந்து போன செயலுக்கும்,,இனி நடக்கப்போகிற செயலுக்கும் குழப்பமடையாமல் வெறுமனமே இருப்பதே ‘சும்மா’ இருப்பது”…
-திரு.உடுமலை தண்டபாணி அவரகள்

News

Read Previous

அமெரிக்கா- ஒரு பார்வை

Read Next

சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *