சிரித்து மகிழ..

Vinkmag ad

சிரித்து மகிழ..

 

😁🤣 டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சுதான் கொல்லுவாங்க!

 

😁🤣 சிவகாசிக்கும்

நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசில காச கரியாக்க வழி சொல்வாங்க..

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!

 

😁🤣 FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?

FILE ல் உட்கார்ந்து பார்க்கணும்.

PILE க்கு பார்த்து உட்காரணும்.

 

😁🤣 செல்போனுக்கும் னிதனுக்கும் என்ன வித்தியாசம்?

னிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல்போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

 

😁🤣 வ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்?

மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்!

 

😁🤣 வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

 

😁🤣 ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர்மற்றொன்று சுகர்!

 

😁🤣 என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது

பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும்

சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்.

 

😁🤣 கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்.

எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்..

News

Read Previous

தெருவோர உணவுக் கடைகளுக்கு மினிஃப்ரிட்ஜ்

Read Next

வடலூர் வரலாறு

Leave a Reply

Your email address will not be published.