அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Vinkmag ad

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (28.10.2018)

விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்த, தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயம் கூறுவதும் அதுவே! (நபியே!)நீர் கூறுவீராக; உறவுகளில் நட்பைத்தவிர இதற்காக நான் யாதொரு கூலியையும் கேட்கவில்லை; எவர் ஒரு நன்மை செய்கிறாரோ அவருக்கு நாம் அதில் (மேலும்) நன்மையை அதிகப்படுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிக்கிறவன், நன்றி பாராட்டுகிறவன்.(42:23)

@இறைவனுக்கு செய்ய வேண்டிய நல்ல அமல்களுக்குப் பிறகு ஒரு மனிதன் நன்மையை செய்ய நாடினால், அவனது சொந்தம் பந்தங்களோடு அழகிய நட்பினை தொடரட்டும் என அல்லாஹ் அவனது அடியார்களின் விசயத்தில் அறிவுறுத்துகிறான்.

எந்த மனிதன் தனது குடும்ப உறவுகளோடு பகைமை பாராது நட்பை மட்டுமே அதிகப்படுத்துகிறானோ, அவனது அழகிய செயலுக்காக, அல்லாஹ்வும் அவனுக்கு நற்கூலியை அதிகமாக்குகிறான் என்று இறைமறை வசனம் நமக்கு உணர்த்துகிறது.

உறவுகளைப் பேணுவதும் நல்ல அமல்களில் உள்ள விசயம் என்று அல்லாஹ் அறிவுறுத்தி இருப்பதால், நாமும் நமது உறவுகளைப் பேணி வாழ்வோராய் இருக்க எனக்கும் உங்களுக்கும் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அருள்புரிவானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

வேலை

Read Next

2,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகள் செய்த தமிழர்கள்… குண்டுரெட்டியூர் ஆச்சர்யம்!

Leave a Reply

Your email address will not be published.