மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை

Vinkmag ad

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில்
மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் 13ஆம்தேதி பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் எம். எஸ்.ஏ. ஷாஜஹான். பொதுச்செயலாளர் ஏ. ஜெய்னுல் ஆலம். மாவட்ட செயலாளர்கள் இராமநாதபுரம் அஷ்ரப் அலி. ரெகுநாதபுரம் அப்துல்ஹமீது. தங்கச்சிமடம் முகைதீன் பக்கீர். திருப்பாலைக்குடி உமர்பாருக். ஆகியோர் கலந்துகொண்டனர்.

நோன்புக் கஞ்சிக்காக வழங்கப்படும் சலுகைவிலை பச்சை அரிசி 2019ஆம் ஆண்டு எந்தெந்த பள்ளிவாசல்களுக்கு வழங்கப்பட்டதோ அதைப் போல இந்த ஆண்டும் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் வழங்க வேண்டும் என்றும்.

இரண்டு நாட்கள் வங்கிகள் விடுமுறை என்பதால் டிடி எடுக்க இயலாதவர்கள் வியாழக்கிழமை டிடி எடுத்து நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசியை எடுக்கும்போது இரண்டு நாட்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கூடாது என்றும் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை உடனடியாக மாவட்ட வருவாய் அதிகாரி அவர்கள் ஏற்றுக்கொண்டு மாவட்ட நுகர்பொருள் வழங்கல் அதிகாரியை தொடர்பு கொண்டு ஐக்கிய ஜமாத்தின் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்குமாறு உடனடியாக உத்தரவிட்டார்கள்.

மேலும் கொரணா பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கும்படி சமுதாய மக்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட வருவாய் அதிகாரி கேட்டுக்கொண்டார்.

News

Read Previous

திருக்குர்ஆன் மீதான சில புரிதல்கள்…!

Read Next

தமிழ் ஒலிப் புத்தகம்

Leave a Reply

Your email address will not be published.