1. Home
  2. ஊரடங்கு

Tag: ஊரடங்கு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு.‌. இராமநாதபுரம், ஜுன்,6- மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாவட்ட அளவிலான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கொரோனா…

தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு!

‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு!’ – சிறு-குறு நிறுவன அதிபர்களின் கூக்குரல்   நாட்டின் தொழில் துறையில் மிக முக்கியமான களம், சிறு-குறு நிறுவனங்கள். தொழில் துறை என்பது டாடாக்களும் பிர்லாக்களும் மட்டும் அல்ல. டிவிஎஸ் நிறுவனம் ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்குகிறது என்றால், அதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட உதிரிபாகங்களை உற்பத்திசெய்யும் சிறு-குறு நிறுவனங்களையும் உள்ளடக்கியதே அது. ஆடைகள் தொடங்கி ஊறுகாய் வரை உள்ளடக்கிய ஒவ்வொரு உற்பத்திக்கும் பின்னணியில் பல சிறு-குறு நிறுவனங்கள் இருக்கின்றன. தொழில் துறையில் பெருநிறுவனங்களைக் காட்டிலும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பையும், பெரிய அளவிலான உற்பத்தியையும் மேற்கொள்பவை இவைதான். கரோனாவுக்குப் பின் சர்வதேச அளவிலான தொழில் முடக்கங்கள் ஒருபுறம் நம்மூர் தொழில்க ளைத் தாக்கியிருக்கின்றன என்றால், தொடரும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் ஒருபுறம் முடக்கியிருக்கின்றன. தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் தொழிலகங்களின் நிலையை… சுஜீஷ், தலைவர் (அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்), பி.என்.ரெகுநாதராஜா ( கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர்), நேரு பிரகாஷ் (சிறு–குறு தொழில்கள் சங்கத் தலைவர், தூத்துக்குடி), பா.அறிவொளி (கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கம்), வெற்றி. ஞானசேகரன், ஒசூர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் ஆகியோர் சிறுகுறு தொழில்கள் இன்று சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துரைக்கின்றனர். தொகுப்பு: கா.சு.வேலாயுதன், கே.கே.மகேஷ், என்.சுவாமிநாதன் (தமிழ் இந்துவில் வந்த கட்டுரை)  

ஊரடங்கு

ஊரடங்கு ஒழிந்தால்தான் எங்களுக்குப் பிழைப்பு   விவசாயிகள் உற்பத்தி செய்கிற பஞ்சை நூலாக்கி, துணியாக்கி, சாயமேற்றி, ஆடையாக்குகிற ஜவுளித் துறை சுமார் 6 கோடிப் பேருக்கு வேலை அளிப்பதுடன், நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 13% பங்களிக்கிறது. நூல், ஆயத்த ஆடை, கைத்தறி உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு, இந்த ஊரடங்குக் காலத்தில் எப்படியிருக்கிறது? அந்தத் தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்? -என அறிந்துகொள்ள தமிழ் இந்து சார்பாக கா.சு.வேலாயுதன், கே.கே.மகேஷ் ஆகிய இருவரும் கிருஷ்ணமூர்த்தி ( பட்டு நெசவாளர், காஞ்சிபுரம்), பிரபு தாமோதரன் (நூற்பாலை உரிமையாளர், கோவை), யுவராஜ் சம்பத் (பனியன் தயாரிப்பாளர், திருப்பூர்), ஹனீபா (ஆயத்த ஆடை தயாரிப்பாளர்,     புத்தாநத்தம்), அ.மணிகண்டன் (நைட்டி – உள்ளாடை உற்பத்தியாளர், தளவாய்புரம்), பிரபாகரன் (ஆயத்த ஆடை தயாரிப்பாளர், மதுரை) ஆகியோரைப் பேட்டி கண்டு ஜூலை 8 தமிழ் இந்துவில் அவர்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.   சுருக்கமாகச் சொன்னால் “கரோனா முடிவுக்கு வந்தால்தான் பழைய நிலைமைக்குத் திரும்ப முடியும். அது எப்போது என்பது தெரியவில்லை; ஊரடங்கையாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஊரடங்கு ஒழிந்தால்தான் எங்களுக்குப் பிழைப்பு” என்பதுதான் அவர்களது…

ஊரடங்கு நேரத்தில் வேட்டையாடும் அரசு

ஊரடங்கு நேரத்தில்      வேட்டையாடும் அரசு கொரோனா தொற்றால் உலகமே அச்சத்திலும் ஒரு நிச்சயமற்ற தன்மையை அனுபவித்த கொண்டு வருகிறது, நாடே இந்த தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருகின்ற நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தை   பயன்படுத்தி முஸ்லிம்களை கைது செய்து கொண்டுயிருக்கிறது இந்திய அரசு. இந்த…

முதுகுளத்தூரில் ஊரடங்கு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசியக் கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர்.   படங்கள் : கார்த்திக், ஆசிரியர்