ஊரடங்கு நேரத்தில் வேட்டையாடும் அரசு

Vinkmag ad

ஊரடங்கு நேரத்தில்      வேட்டையாடும் அரசு


கொரோனா தொற்றால் உலகமே அச்சத்திலும் ஒரு நிச்சயமற்ற தன்மையை அனுபவித்த கொண்டு வருகிறது, நாடே இந்த தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருகின்ற நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தை   பயன்படுத்தி முஸ்லிம்களை கைது செய்து கொண்டுயிருக்கிறது இந்திய அரசு.

இந்த அசாதாரண சூழ்நிலையில் இந்த தொற்றுநோய் அதிலிருந்து உருவான பிரச்சினை, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் பொது முடக்கத்தால் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை, பட்டினியால் வாடும் நிலை, அரசிடமிருந்து எந்த உதவியும் யில்லாதால் இறுதியில் அவர்கள் பல மணி நேரம் கால்நடையாக வீடுகளுக்கு செல்கின்றனர்,  இதை யெல்லாம் பற்றி கவலைபடாத அரசு இந்த ஊரடங்கு காலத்தை  ஈடுசெய் உற்பத்தியை பெருக்க பெரு முதலாளி பாதுகாக்க , பணி நேரத்தை  8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற  நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

 
இங்கு கொரோனாவுக்கு மத சாயம் பூசப்பட்டு மிகவும் கச்சிதமாக சங்பரிவார் அமைப்பு சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக ஒரு இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை  முழுமையாக செயல்படுத்தியது, கொரோனா  தொற்றில் நூற்றுக்கு எண்பது சதவிகிதம் தப்லீக், இருபது சதவிகிதம் பப்ளிக் என்று தினந்தோறும் ஊடகத்தில் விஷத்தை கக்கியது, இது ஒரு இஸ்லாமோபோபியா பிரச்சாரத்தை முன்னேடுத்தது இந்தியத் துணைக்கண்டத்தில்.

மதங்களால் மக்களை பிரிக்கும் சட்டம் CAA, NRC, NPR, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மக்கள் விரோத  சட்டத்தை  திரும்ப பெற கோரி தொடர் போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்களை டெல்லி காவல்துறை திட்டமிட்டு கைது செய்து வருகின்றது, அதில் சமூக செயல்பாட்டாளர் ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி சஃபூரா சர்கார் (27) மூன்று மாத கர்ப்பிணி பெண் உள்ளிட்டு மாணவர்கள் பலர் ஊபா (Unlawful Activities Prevention Act) UAPA சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த  மூன்று மாத கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் இந்தியா அரசு கைது செய்து திகார் சிறையில் தனி அறையில் அடைத்துள்ளது   கடந்த ஏப்ரல் மாதத்தில்,  அதன் பின்னர்  கருப்பு சட்டத்தின் துனை கொண்டு ஊரடங்கு நேரத்தில் CAA எதிராக போரடியவர்களை தேடி தேடி நசுக்குகின்றது அரசு, இந்த புனித ரமழான் மாதத்தில்.


குடியுரிமைப் போராளிகள் பலரையும் பழிவாங்கும் விதமாக கைது செய்து வருகிறது மோடி தலைமையிலான அரசு, இன்றைய கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஊரடங்கு தடை, பொருளாதார மந்தம், பசியால் பட்னி சாவு, வாழ வழியில்லாமல் தற்கொலை, இவைகளுக்கு இடையில் இந்தத் அரசு கொடிய UAPA சட்டப் பிரிவுகளில் இரக்கமின்றி அறவழியில் போராடிய போராளிகள் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது.


ஜாமிய பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்சஃபூரா, மீரண் ஹைதர், சமூக ஆர்வலர்கள் காலித் சைஃபி, இஷ்ரத் ஜஹான் மற்றும் வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் இந்த கருப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு முதலில் கொரோனா ஜிகாத் என்று இழிவு படுத்தியது, பின்னர் சமூகத்தின் ஜனநாயக ரீதியாக குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்குகிறது.


மேலும் சிறுபான்மை அமைப்புகளின் தேசிய ஆணையத்தின் தலைவர் சஃபருல் இஸ்லாம் கான (National Commission for Minorities) அவர்கள் மீது டெல்லி போலீஸ் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28 அன்று சமூக ஊடகம் ஒன்றில் சஃபருல் இஸ்லாம் கான் அவர்கள் ஒரு பதிவிட்டிருந்தார். கொரோனா தாக்குதலை ஒட்டி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பப்படும் வெறுப்பு அரசியலைக் குவைத் கண்டித்துள்ளதற்காக அதில் அவர் அதற்கு நன்றி தெரிவித்து இருந்தார், இந்தப்பதிவிற்காகவே இப்போது அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அவர் மீதான இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இந்த உரிமை கூட ஒரு ஆணையத்தின் தலைவருக்கு இல்லை என்றால் இது என்ன ஜனநாயகமா? சர்வாதிகாரமா?


ஷாஹின்பா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் இந்திய அரசு கடும் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் வழக்குகள் தொடுத்து சிறையில் அடைப்பதை ஆம்னெஸ்டி இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஜே.என.யூ (JNU) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கிய கோமல் ஹர்மாவை டெல்லி காவல்துறை அனைத்து ஆதாரங்களும் வீடியோ பதிவுகள் இருந்தும் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை, ஆனால் எந்த வன்முறையும் இல்லாமல் ஜனநாயக வழியில் உரிமைக்காக போராடிய  கர்ப்பிணி பெண்  சஃபூரா சர்கார்  உள்ளிட்ட ஜாமியா மாணவர்களை சட்டவிரோதமான முறையில் அரசு கைது செய்துள்ளது.

 

 கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்தில் 53 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். கொலைகாரன்கள் எந்தக் கவலையும் இல்லாமல் சுதந்திரமாக வெளியில் அந்த துப்பாக்கித்தரர்கள் அலைகின்றனர், ஆனால் அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த தேசத்திற்கு கோட்சேவின் துப்பாக்கி தேவையில்லை, மாறாக காந்தியின் கைத்தடி தான் வேண்டும்.

 

  • பாஜிலா பேகம் N.M

 

 

News

Read Previous

ஒலிப்புத்தகம்

Read Next

விரும்பித் திறத்தல் முறையாமோ !

Leave a Reply

Your email address will not be published.