ஊரடங்கு

Vinkmag ad

ஊரடங்கு ஒழிந்தால்தான் எங்களுக்குப் பிழைப்பு

 

விவசாயிகள் உற்பத்தி செய்கிற பஞ்சை நூலாக்கி, துணியாக்கி, சாயமேற்றி, ஆடையாக்குகிற ஜவுளித் துறை சுமார் 6 கோடிப் பேருக்கு வேலை அளிப்பதுடன், நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 13% பங்களிக்கிறது. நூல், ஆயத்த ஆடை, கைத்தறி உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு, இந்த ஊரடங்குக் காலத்தில் எப்படியிருக்கிறது? அந்தத் தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்?

-என அறிந்துகொள்ள தமிழ் இந்து சார்பாக கா.சு.வேலாயுதன், கே.கே.மகேஷ் ஆகிய இருவரும் கிருஷ்ணமூர்த்தி பட்டு நெசவாளர்காஞ்சிபுரம்), பிரபு தாமோதரன் (நூற்பாலை உரிமையாளர்கோவை), யுவராஜ் சம்பத்

(பனியன் தயாரிப்பாளர்திருப்பூர்), ஹனீபா (ஆயத்த ஆடை தயாரிப்பாளர்,    

புத்தாநத்தம்), .மணிகண்டன் (நைட்டி – உள்ளாடை உற்பத்தியாளர்தளவாய்புரம்),

பிரபாகரன் (ஆயத்த ஆடை தயாரிப்பாளர்மதுரைஆகியோரைப் பேட்டி கண்டு ஜூலை 8 தமிழ் இந்துவில் அவர்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.  

சுருக்கமாகச் சொன்னால் “கரோனா முடிவுக்கு வந்தால்தான் பழைய நிலைமைக்குத் திரும்ப முடியும். அது எப்போது என்பது தெரியவில்லை; ஊரடங்கையாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஊரடங்கு ஒழிந்தால்தான் எங்களுக்குப் பிழைப்பு” என்பதுதான் அவர்களது கருத்து.

News

Read Previous

கனவு காணுங்கள்

Read Next

கொரோனா துதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *