கொரோனா துதி

Vinkmag ad
10.07.2020  அன்று வீட்டில் கொரோனா  போட்டோ வைத்து விளக்கேற்றி , அன்று காலையும் மாலையும் இதைப் படித்து
கருஞ்சீரகம், மிளகு, சுக்கு, கஷாயம் வைத்து நிவேதனம் செய்து அனைவரும் சாப்பிட்டால் நல்லது நடக்கலாம்.
108ம்  ஊரடங்கு நாள்  கொரோன துதி. 
1. கொரோனாவே போற்றி.
2. ஊஹானில் பிறந்தாய் போற்றி.
3.உலகெங்கும் பரவினாய்  போற்றி
4. உலகையே கலக்கினாய் போற்றி
5.உயிர்களை பறித்தாய் போற்றி .
6.வவ்வாலின்  பிள்ளையே போற்றி. .
7. தொண்டையில் அமர்ந்தாய் போற்றி.
8. சுவாசத்தைக் கெடுத்தாய் போற்றி.
9. மூச்சினிலே பரவுவாய் போற்றி.
10. கரங்களில் பதிவாய் போற்றி.
11. வைரசே  போற்றி.
12. வைரஸின் சக்கரவர்த்தியே  போற்றி.
13.மருந்தில்லா வைரசே  போற்றி.
14. தொழில்களை முடக்கினாய் போற்றி.
15. சீனாவின் பரிசே போற்றி.
16சீனாவின் மறை முக  ஆயுதமே போற்றி.
17சீனாவை உலகமே வெறுக்க வைத்தாய் போற்றி.
18சீனப்பொருட்களைத் தடைசெய்ய வைத்தாய் போற்றி.
19ஜின்பிங்கை ஜம்பிங் செய்யவைத்தாய் போற்றி.
20மக்களை பாதித்தாய் போற்றி
21மனம் கலங்க வைத்தாய் போற்றி
22கைகழுவ வைத்தாய் போற்றி.
23முகம் மூட வைத்தாய் போற்றி.
24தள்ளிஇருக்க வைத்தாய் போற்றி  ..
25தனிமையைத் தந்தாய் போற்றி .
26தப்லிக் ஜமாத் கூட்டத்தால் பரவினாய போற்றி
27கோயம்பேட்டில் குடிகொண்டாய் போற்றி
28கூட்டமாய் இருந்தால் பரவுவோய் போற்றி
29வயதானவர்களைப்   பற்றுவாய் போற்றி
30பலகீனமானவர்களை பாதிப்பாய் போற்றி .
31திமிர்பிடித்து திரிவோரைத் தாக்குவாய் போற்றி
32தடைமீறி நடப்போரை பீடிப்பாய் போற்றி
33ரயிலை மருத்துவமனை ஆகினாய் போற்றி
34பள்ளியை மருத்துவமனை ஆகினாய் போற்றி.
35ஊரடங்கு அறிவிக்க வைத்தாய் போற்றி
36ஊர்விட்டு வந்தோரை ஓடவைத்தாய் போற்றி .
37பட்டினி கிடைக்க வைத்தாய் போற்றி.
38எதிர்கட்சிகளுக்குத் தீனியளித்தாய் போற்றி.
39ஆளும் கட்சிகளுக்கு சோதனை தந்தாய் போற்றி.
40பொருளாதாரம் சிதையச்   செய்தாய் போற்றி .
41வடிவேலு மீம்ஸில் வலம் வந்தாய் போற்றி .
42சித்த வைத்தியத்தை உயரச்  செயதாய் போற்றி .
43அலோபதியை அலற வைத்தாய் போற்றி
44கபசுர குடிநீருக்கு கட்டுப்பட்டாய் போற்றி
45உப்பு , மிளகு தின்றால் விலகிடுவாய் போற்றி
46குடும்பத்தினர் இணைந்திருக்க வைத்தாய் போற்றி .
47வீட்டிலிருந்து வேலை செய்ய வைத்தாய் போற்றி
48இல்லத்தரசிகளின் சுமை அதிகரித்தாய் போற்றி.
49பள்ளி , கல்லூரிகளை மூடவைத்தாய் போற்றி.
50குழந்தைகளை வீட்டிற்குள் அடையவைத்தாய் போற்றி.
51ஆன் லைனில்  கல்வியை  கற்க வைத்தாய் போற்றி.
52பரீட்சை எழுதாமல் பாஸாக வைத்தாய் போற்றி. .
53அரசாங்க அலுவலர் சம்பளம் மட்டும் பேரவைத்தாய் போற்றி.
54தனியார் அலுவலரைத் தவிக்கவைத்தாய் போற்றி.
55ஓட்டல் உணவை மறக்கவைத்தாய் போற்றி
56வீட்டில் ஆண்களையும் சமைக்கவைத்தாய் போற்றி .
57அரசாங்கக் கடன்களை அதிகரிக்க வைத்தாய் போற்றி.
.58இலவசங்கள் அள்ளித்தர வைத்தாய் போற்றி.
59வல்லரசு நாடுகளின் பல்லை பிடிங்கினாய் போற்றி.
60அமெரிக்காவை ஆட்டிப்படைத்தாய் போற்றி.
61 இத்தாலியை இடிந்துபோக வைத்தாய் போற்றி.
62இங்கிலாந்தை சொங்கிலாந்து ஆகினாய் போற்றி
63ரஷ்யாவில் புகுந்து ரகளை செய்தாய் போற்றி.
64பிரேசிலில் பிரேதங்கள் குவியவைத்தாய் போற்றி.
65குவலய ஜனத்தொகை குறைய வைத்தாய் போற்றி.
66அரபுநாடுகளையும் அரளவைத்தாய் போற்றி.
.67 ஆஸ்திரேலியாவை மிரளவைத்தாய் போற்றி.
68..கிரிக்கெட் ஆட்டத்தை கைவிடவைத்தாய் போற்றி
69. அனைத்து விளையாட்டையும் அடக்கிவைத்தாய் போற்றி.
70. ரசிகர்களின்றி போட்டி நடக்கவைத்தாய் போற்றி.
71. பவுலர்கள் ஆச்சாரமாய் இருக்கவைத்தாய் போற்றி.
72.கட்டிபிடிக்கத்  தடைவிதித்தாய் போற்றி.
73, இரவு விடுதிகளை மூடவைத்தாய் போற்றி.
74. சினிமாத்தியேட்டர்களை மூடவைத்தாய் போற்றி.
75. சீரியல்களில் இருந்து காப்பாற்றினாய் போற்றி.
76. காற்றில் மாசு குறைத்தாய் போற்றி.
77. நீரில் கழிவுகள் கலப்பதைத் தவிர்த்தாய் போற்றி.
78. மருத்துவர்களின் மகத்துவம் அறியவைத்தாய் போற்றி.
79. செவிலியர்களின் சேவை புரியவைத்தாய் போற்றி.
80. துப்புரவுத் தொழிலாளர்களை மதிக்க வைத்தாய் போற்றி.
81. சானிடைசர் உபயோகிக்க வைத்தாய் போற்றி.
82. சானிடைசர் தயாரிப்பாளரை மகிழ வைத்தாய் போட்டி.
83. முகக்கவசம் தயாரிப்போர்க்கு ஊக்கம் தந்தாய் போற்றி.
84. கவச ஆடை தயாரிப்போர்க்கு வாழ்வளித்தாய் போற்றி.
85. மருந்துகள் ஏற்றுமதி செய்ய வைத்தாய் போற்றி
86. பாரதத்தின் பெருமை உயர்த்தினாய் போற்றி.
87. ஆலயங்களை மூட வைத்தாய் போற்றி.
88. வீட்டையே ஆலயமாய் ஆக்கிவைத்தாய் போற்றி.
89. ஜாதி, மத வேறுபாடின்றி  தாக்கினாய் போற்றி.
90. திருமணக்கொண்டாட்டங்கள் தவிர்க்க வைத்தாய் போற்றி.
91. சிக்கனமாய் வாழ வைத்தாய் போற்றி.
92. சலவை செலவை குறைத்தாய் போற்றி.
93. முடிவெட்டும் செலவை தவிர்க்க வைத்தாய் போற்றி.
94. ப்யூட்டி பார்லர்களை மூடினாய் போற்றி.
95. இயற்கை அழகோடு இருக்கவைத்தாய் போற்றி.
96. பெட்ரோல் செலவைக் குறைத்தாய் போற்றி.
97. மளிகை செலவைக் கூட்டினாய் போற்றி.
98. உலகே உனக்கு அஞ்ச வைத்தாய் போற்றி.
99.  இந்தியாவை விட்டு விலகுவாய் போற்றி
100. சீனாவுக்கே திரும்பச் செல்வாய் போற்றி
100.வீணாப்போனவங்களை வதைப்பாய்  போற்றி .
101. சுத்தம் ,சுகாதாரம் பேணுவோம் போற்றி
 102. வணக்கம் சொல்லி வரவேற்போம் போற்றி.
103. முகக்கவசம் என்றும் அணிவோம் போற்றி.
104. சமூக இடைவெளி கடைபிடிப்போம் போற்றி.
105. பார்களுக்குச் செல்வத்தைத் தவிர்ப்போம் போற்றி.
106. இனியும் எங்களை வதைக்காதே போற்றி.
107. இயல்புநிலை திரும்ப விடுவாய் போற்றி.
108 . போனால் உன்னைப் போற்றுவோம் போற்றிப்போற்றி .
நுண்ணுயிரியாய் வந்து நுழைந்து பலரின்
இன்னுயிரைப்பறித்த இதயமற்ற கொரோனாவே
மண்ணுலகிலிருந்து நீ மறையும் நன்னாளே
பொன்னாளாகும் எமக்கு .
 சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

ஊரடங்கு

Read Next

ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *