1. Home
  2. மழை

Tag: மழை

மழையின் மடியில்

கடந்தகால நினைவுகளை கண்முன்கொண்டுவந்து நிறுத்தவும், பழையநாட்களை புதுபிக்கவும், வாய்ப்பளித்திருக்கும் வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழ்த்தேர் அச்சிலேறிஅகிலத்தையும் வலம்வர வாழ்த்தும் நெஞ்சமாய் உங்கள் அன்புடன்மலிக்கா”வின் முதல் கவிதை  மழையின் மடியில் ================================= துளித் துளியாய் விழும் மழையே! துணைக்கு யாருமில்லையென எனைத் தொட்டுத் தீண்டி தூறல் சிந்தி அழும் மழையே! வா வா நானுமிருக்கேன் உன் துணைக்கு உன் தோழியாய்!   சிணுங்கி சிணுங்கி வரும் மழையே! சிவந்து சினந்து கொளுத்தும் வெயிலில் சூட்டைத் தணிக்கும் செல்லமழையே! வா வா நீர் வழியா வயல்வெளியும் செழிக்கட்டுமே உன்தயவால்!   மழையே குளிர் மழையே இயற்கையனைத்தும் உன்மடியில் மழையே வான் மழையே மயங்கும் மனமும் மனித உடலும் மழைத்துளியின் அன்புப் பிடியில்   மழையே அருள் மழையே மாபெரும் அருளாளன் மனமுவந்து அளித்த மாமழையே வா வா வெகு அழகாய் நலமாகுமே இவ்வுலகம்  உன் வரவால்!……….     பள்ளிக்கூட நியாபங்களையும், பருவத்தையும் எட்டிஎட்டி தொட்டுநின்றகாலம்,  மின்சாரம் துண்டிக்கப்பட்டு சூரிய ஒளியைகடன்வாங்கி ஒளிர்ந்து கொண்டிருந்த நிலாக்கால இரவொன்றில், வீட்டினுள்கவ்விய இருளின் பயத்தை விரட்ட முற்றத்தில் வந்தமர்ந்துமுழங்காலைகட்டிகொண்டு வானை வேடிக்கை பார்க்கையில்,இருளைகளைய முற்பட்ட மின்மினிகளின் வெளிச்சத்தை விரட்ட எண்ணி, திடீரெனமின்னல் மின்னி, இடி இடித்து துளித்துளியாய் கொட்டியதூறல்கள்,என்தேகம் தொட்டு விளையாட,சட சடவென பெருமழையாய்பெய்யத்தொடங்கியதும், மண்வாசம் மூக்கைத்துளைத்தபடி கண்களைகிறங்கடிக்க, இருந்த இடத்திலிருந்து எழாமல் நனைந்துகொண்டே இருந்தஎனக்குள் மின்னல்கீற்றாய் சிலவரிகள் மின்னி மின்னி இதயத்தை இடித்தன.  …

மழை

மழை; மழையதை வேண்டு.. (வித்யாசாகர்) கவிதை!   மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை…

இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழா

ஜுன் 30 ந் தேதி நடந்த சகோதரர் இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழாவில்  நான் வாசித்த கவிதை மற்றும் இம்தியாஸ், பக்ருதீன் பேச்சுக்கள் எனது நண்பர் தன் படக்கருவியில் பதிவு செய்து வைத்திருந்தார்.  மற்ற நிகழ்ச்சிகளை பதிவு செய்யவில்லை.  என் என்று ஓசியில் வாங்கு எனக்கு…

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே !

           ( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி )   அளவிலா அருளும் நிகரில்லா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன். அவன் அருளாலன் அன்புடையோன், அவன் அனைத்தையும் படைப்பதில், பரிபாலிப்பதில் தனித்தவன். அவ்வாறே அண்ட சராசரங்கள் அனைத்திலுள்ள படைப்பினங்கள் யாவற்றினதும் பரிபாலகன் அல்லாஹ்வே ஆவான்.…