மழையின் மடியில்

Vinkmag ad

கடந்தகால நினைவுகளை கண்முன்கொண்டுவந்து நிறுத்தவும், பழையநாட்களை புதுபிக்கவும்வாய்ப்பளித்திருக்கும் வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்தமிழ்த்தேர் அச்சிலேறிஅகிலத்தையும் வலம்வர வாழ்த்தும் நெஞ்சமாய் உங்கள் அன்புடன்மலிக்காவின்

முதல் கவிதை 

மழையின் மடியில்

=================================

துளித் துளியாய் விழும் மழையே!

துணைக்கு யாருமில்லையென

எனைத் தொட்டுத் தீண்டி

தூறல் சிந்தி அழும் மழையே!

வா வா நானுமிருக்கேன்

உன் துணைக்கு உன் தோழியாய்!

 

சிணுங்கி சிணுங்கி வரும் மழையே!

சிவந்து சினந்து கொளுத்தும் வெயிலில்

சூட்டைத் தணிக்கும் செல்லமழையே!

வா வா நீர் வழியா

வயல்வெளியும் செழிக்கட்டுமே

உன்தயவால்!

 

மழையே குளிர் மழையே

இயற்கையனைத்தும் உன்மடியில்

மழையே வான் மழையே

மயங்கும் மனமும் மனித உடலும்

மழைத்துளியின் அன்புப் பிடியில்

 

மழையே அருள் மழையே

மாபெரும் அருளாளன்

மனமுவந்து அளித்த மாமழையே

வா வா வெகு அழகாய்

நலமாகுமே இவ்வுலகம் 

உன் வரவால்!……….

 

 

பள்ளிக்கூட நியாபங்களையும், பருவத்தையும் எட்டிஎட்டி தொட்டுநின்றகாலம்,  மின்சாரம் துண்டிக்கப்பட்டு சூரிய ஒளியைகடன்வாங்கி ஒளிர்ந்து கொண்டிருந்த நிலாக்கால இரவொன்றில்வீட்டினுள்கவ்விய இருளின் பயத்தை விரட்ட முற்றத்தில் வந்தமர்ந்துமுழங்காலைகட்டிகொண்டு வானை வேடிக்கை பார்க்கையில்,இருளைகளைய முற்பட்ட மின்மினிகளின் வெளிச்சத்தை விரட்ட எண்ணிதிடீரெனமின்னல் மின்னிஇடி இடித்து துளித்துளியாய் கொட்டியதூறல்கள்,என்தேகம் தொட்டு விளையாட,சட சடவென பெருமழையாய்பெய்யத்தொடங்கியதும்மண்வாசம் மூக்கைத்துளைத்தபடி கண்களைகிறங்கடிக்கஇருந்த இடத்திலிருந்து எழாமல் நனைந்துகொண்டே இருந்தஎனக்குள் மின்னல்கீற்றாய் சிலவரிகள் மின்னி மின்னி இதயத்தை இடித்தன.

 

இதயத்தில் இதமாய் இடித்த எண்ணங்களை எழுத்துக்களாக்கமுயற்சித்ததின் விளைவு, சின்ன சின்னதாய் கிறுக்கிகொண்டிருந்த நான்முதல் முறையாக எண்ணங்களையும் உணர்வுகளையும் முழுமைப்படுத்தும்விதமாய்முழுக்கிறுக்களாய் உருப்பெற்று என் பள்ளி நோட்டில்  முளைத்தது முதல்கவிதை இந்த மழைக்கவிதைஆர்வமிகுதியால்சிலகிறுக்கல்களை சில இதழ்களுக்கு அனுப்பியபோதும் வெளிவராமல்போகவேஅலுச்சாட்டியம் செய்து அடுக்கடுக்காய் நிறைத்தனநோட்டையும்டைரியென்னும் நாட்குறிப்பையும்விடாமுயற்சியாய்அவ்வபோது மீண்டும் மீண்டும் பெயர்மாற்றி அனுப்பியதில் ஓரிருகவிதைகள் வெளிவந்ததுவெளிவந்த முதல் கவிதையும் 8வரி ”மழைக்கவிதை ”மரியா” என்ற பெயரில் பதினைந்து வயதில் பதியமிட்டவிதைகள்பல ஆண்டுகள் கடந்து 2009 தில்பாலைதேசத்தில்இணையத்தில் வழியாகபூத்தன பலகிறுக்கல்கள் மலர்கள்அதன்வழியே வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழில் முளைத்தது என் மனவிதைகள் மணமணக்கும் தமிழ்பூவாய்அதனிலிருந்து தொடர்ந்து விதைகிறேன் விதைகளை.

மண்ணில் விழும் விதைகள்யாவும் முளைத்து எழுவதில்லைஅதுபோல்விழும் விதைகளில் ஒரு விதையேனும் மண்ணை முட்டி முளைத்துப்பூக்காமல் இருப்பதுமில்லைவான்மழை பூமியை நனைத்து மண்ணுக்குள்நுழைவதுபோல்என்மன உணர்வுகள்பிறரின் மனங்களைத்தொட்டுஉணர்வுகளுக்குள்ளும் நுழையதூவிக்கொண்டேயிருப்பேன் கவிதைமலர்களை..

 

 

அன்புடன் மலிக்கா

 

News

Read Previous

ஒரு யோசனை – தமிழ்த்தேனீ

Read Next

சுய தொழில்கள்- சமோசா தயாரிப்பு

Leave a Reply

Your email address will not be published.