துபாயில் வஃபாத்தான தமிழக இளைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

Vinkmag ad

 

துபாயில் வஃபாத்தான தமிழக இளைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

 

துபாய் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தின் லால்பேட்டை நகரைச் சேர்ந்த அசாருதீன் அலி ( வயது 27 ) கடந்த 13-ஆம் தேதி வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இந்திய துணைத் தூதரகம் மரணமடைந்த தமிழக இளைஞரின் உடலை விரைவாக நல்லடக்கம் செய்ய தேவையான பணிகளை மேற்கொள்ள ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்தை கேட்டுக் கொண்டது.

இதனையடுத்து இறந்த இளைஞர் லால்பேட்டை நகரைச் சேர்ந்தவர் என்பதால் அபுதாபி அய்மான் அமைப்பின் பொதுச் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானியை தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கப்பட்டது.

அவர் உடனடியாக துபாய் லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகி முகைதீன், இறந்தவரின் உறவினர் சாதிக் ஆகியோருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகளின் ஆதரவுடன் அனைத்து வித ஆவணங்களும் அரசுத்துறையில் இருந்தும், குடும்பத்தினரிடம் இருந்தும் பெறப்பட்டது. ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் உள்ளிட்ட நிர்வாகிகளின் வழிகாட்டுதலுடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை 26.07.2020  அசர் தொழுகைக்குப் பின் துபாய் அல் கூஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

News

Read Previous

மனதில் உறுதி வேண்டும்

Read Next

மேதை அப்துல் கலாம் வாழ்க!

Leave a Reply

Your email address will not be published.