அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல் அமைச்சர் பங்கேற்பு

Vinkmag ad
aa3அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல் அமைச்சர் பங்கேற்பு
அல் அய்ன் :
அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பேரவை தொடக்க நிகழ்ச்சி 26.06.2019 புதன்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல் அமைச்சர் வி. நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலாவது முதல் அமைச்சர் என்ற பெருமையை வி. நாராயாணசாமி பெற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய சமூக நல மையத்தின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் முதல் முறையாக ஒரு முதல் அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது மிகவும் பெருமையளிப்பதாக குறிப்பிட்டார். இந்த மையத்தின் சிறப்பான சேவைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இலக்கிய அணியின் செயலாளர் நவ்ஷாத், பெண்கள் பிரிவின் தலைவர் சவிதா நாயக் மற்றும் செயலாளர் சித்ரா சிதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஐ ஆர் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
புதுச்சேரி முதல் அமைச்சர் வி. நாராயணசாமி  தனது உரையில் இந்திய மக்கள் தங்களது கலை, கலாச்சாரத்தை சுதந்திரமான முறையில் வெளிப்படுத்த உதவியாக இருந்து வரும் அமீரக ஆட்சியாளர்களுக்கு தனது உளம் கனிந்த பாராட்டுக்களை தெரிவித்தார். அல் அய்ன் இந்திய சமுக நல மையத்தின் நிர்வாகிகள் அனைவரும் அரசு விருந்தினர்களாக வந்து புதுச்சேரியை பார்வையிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இடம் இலவசமாக கொடுத்து தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார்.
டிஜிபுதி நாட்டுக்கான அமீரகத்துக்கான தூதர் அஹமது யபூனி அல் தாஹிரி தனது உரையில் இந்தியர்கள் அமீரகத்தின் வைரங்கள் என பெருமிதம் தெரிவித்தார். இந்திய சமூக நல மையத்தின் பணிகள் சிறப்புற தனது வாழ்த்தை தெரிவித்தார்.
அதன் பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பேரவையை புதுச்சேரி முதல் அமைச்சர் வி. நாராயணசாமி  தொடங்கி வைத்தார். மேலும் முதல் அமைச்சருக்கு அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி ஏ. முஹம்மது மைதீன், அஜ்மான் அல் ஹிரா மருத்துவ மையத்தின் சேர்மன் டாக்டர் இலியாஸ், பா குழுமத்தின் சேர்மன் ஹசினா பர்வீன் பானு, அல் அய்ன் தமிழ் குடும்பத்தின் ராஜவேல் உள்ளிட்ட குழுவினர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
பொருளாளர் சந்தோஷ் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர் அமீர கான், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், முஸ்தபா  உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.aa9aa92

News

Read Previous

ஒரு தமிழ்த்தாத்தா

Read Next

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்!

Leave a Reply

Your email address will not be published.