ஒரு தமிழ்த்தாத்தா

Vinkmag ad
ஒரு தமிழ்த்தாத்தா
=======================================================ருத்ரா
“தமிழா! தமிழா!
இக்குரல் உனக்கு கேட்கிறதா?
கல்லும் மண்ணும்
அந்த நெருப்புக்குழம்பிலிருந்து
உருவானபோது உயிர்த்த‌
அந்த உயிர்த்தொகுதியிலிருந்து தான்
உன் எட்டுத்தொகையும்
பத்துப்பாட்டும்
உயிர்த்ததென்று
ஒரு பழம்பெருமை பேசும்
நோயில் நாம் கிடக்கின்றோம்.
இது தமிழ் குமிழியிட்ட போதே
தோன்றிய “பேலியோ சின்ட்ரோம்”நோய்.
“நோய் நாடி நோய் முதல் நாடி
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”
அந்த “நோய் முதல் நாடிய”போது
பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில்
உள்ள
ஏதோ “ஒரு நாவலந்தீவாய்”
ஒரு தலைகீழ் புவி ஈர்ப்பு விசை உள்ள‌
அந்த தொங்கு மண்டலத்தில்
ஆங்கிலப்படம் “அவதாரில்”
காண்பது போல் உள்ள‌
ஒரு மண்ணில் இருந்து
அந்த “தமிழ் ஏலியன்”
தன் ஒளி எனும்
தன் அறிவு எனும்
தன் உயிர் எனும்
மகரந்தங்களை இந்த‌
தமிழ் நாட்டில் தூவியிருக்குமோ
என்று தோன்றுகிறது.”
என்னை முற்றிலுமாய் சோதித்த‌
மூளை நரம்பியல் நிபுணர்
என் உறவினர்களிடம் கூறுகிறார்.
மூளையில் உள்ள‌
பர்க்கிஞ்சே செல்களில்
“ப்ரேன் காஸ்மாலஜி”
எனும் ஆயிரக்கணக்கான‌
பரிமாணங்களை சுருட்டி மடக்கிய‌
(கர்ல்டு அப் டைமன்ஷன்கள்)
ஒரு நரம்பியல் வெளி
(நியூரன் ஸ்பேஸ்) இருக்கிறது.
அதன் நியூரான் கதிர்வீச்சின் காரணமாய்த்தான்
இவர் இப்படியெல்லாம் கூறுகிறார்.
இவர் கூறுவது
விஞ்ஞான அடிப்படை.
தர்க்கவியல் எனும்
சிந்தனை ஆற்றுப்படையின்
கசிவுகள் தான்.
இருப்பினும் இவர் சங்கிலியால்
பிணைக்கப்பட தேவையில்லை.
“நோ..நோ..நான்
ஏதோ ஒலிக்குறிப்பில்
புரிய முடியாத வகையில்
(நான் டீ சைஃபரபிள்)
ஏதேதோ ஒலி தருகிறேன்.
எனக்குத்தெரிகிறது
அதில் ஒரு “மறை மாத்திரை” இருக்கிறது.
அதன் ஒலிப்பிசிறுகளில்
நேனோ அதிர்வுகள் உள்ளன.
அது காஸ்மிக் தமிழாலஜி
நான் ஏதேதோ ஒலிக்கின்றேன்.”
அந்த டாக்டர் சொல்கிறார்.
இவரை தனியறையில்
ஆனால் மிகவும் சக்திவாய்ந்த‌
ஆர்டிஃபிசியல் இன்டெல்லிஜென்ஸ் மூலம்
இயங்கும் கணினிகளின் அறையில்
அடைத்து வையுங்கள்.
……………
………………
“முடியாது..முடியாது
நான் தமிழர்களின் ஒலிவெள்ளத்துள் தான்
இருப்பேன்”
…..
நான் வீறிட்டு அலறியது கண்ட‌
என் கொள்ளுப்பேரன்
தாத்தா படுத்திருங்கள்.
உங்களுக்கு ஒன்றுமில்லை
என்கிறான்.

News

Read Previous

முனைவர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது

Read Next

அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல் அமைச்சர் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *