தோஹாவில் இலவச பல் மருத்துவ முகாம்
தோஹாவில் இலவச பல் மருத்துவ முகாம்
தோஹா :
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவின் பர்வா சிட்டியில் கிம்ஸ் ஆஸ்பத்திரி உள்ளது.
இந்த ஆஸ்பத்திரியில் தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் நஜிமா நசிர் பணிபுரிந்து வருகிறார்.
இங்கு இலவச பல் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுவதும் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள விரும்புவோர்
50817817 என்ற எண்ணில் தொடர்பு முன்பதிவு செய்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெள்ளிக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பல் மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
பல் மருத்துவம் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.