நினைவில் நிற்கும் யாழ்ப்பாணம்

Vinkmag ad
Jaffna .jpeg

 

நினைவில் நிற்கும் யாழ்ப்பாணம்

பொன்  குலேந்திரன் (கனடா )

 

யாழ்ப்பாணத்தின்  சின்னமாம்

யாழ் என்ற  பாணன்  மீட்டக் கருவி

 

ஆங்கிலத்தில்  யாப்னா  என்பது  யாழ் துறைமுகம்

அர்த்தத்தில்   போர்துகேயர்   வைத் த  பெயர்

 

போருக்கு  கொண்டு வந்த யானைகளை

பந்தி  கட்டிய  ஆனைபந்தி யாழ் நகரின்  வட்டாரம்

 

கந்தபுராண  மடம அமைந்த இடம் கந்தர்மடம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

கந்தபுராண    மடத்துப்     பிரபு பேணிய  மடம்.

 

கலட்டி  அம்மன் அமைந்த இடம்

கற்கள்  நிறைந்த வயல்கள் சூலந்த ஊர்                                                                                                                                                                                                                                                                                                                                            

 

நல்லூர்  கந்தன் வாசம் செய்யும்

நல்லூர்  இராஜதானிஇருந்த இடம்

 

பரவைக் கடல் தழுவிய ஊர்,

பாசிகள் கடல் நிரம்பிய  பாசையூர்

 

 

வண்ணம் பூசுவோர் பண்ணைக்கு அருகில்

செட்டிகளோடு வாழ்ந்த வண்ணார் பண்ணை.

 

கில்னர்  இந்துக் கல்லூரி   வைதீஸ்வரா ,

கல்வி ஸ்தாபனங்கள் பல அமைந்த வட்டாரம்

 

நல்லூருக்கு  கிழக்கே நாயன்மார் கட்டு

நாயன்மருக்குக மடங்கள் இருத்த இடம்

 

கள்ளி  போன்ற  மூலிகைகள்  இருந்தகாடு

கலள்வியன்காட்டு  சந்தை இருக்கும் இடம் .

 

கொக்குகள்  வில் போன்ற  குளத்தில்

கூட்டமாய்   மரக் கிளைகளில் தங்கிய கொக்குவில்

 

சங்கிலியன் மனைஇருந்த  சங்கிலியன் தோப்பு

சிலை அவனுக்கு முத்திரை சந்தியில் உண்டு

 

நகைகளை வடிவமைக்கும் கைவினைஞர்கள்,

நாச்சிமார் கோவிலடியில்  வாழும் இடம்

 

கரைக்கு வந்து சென்ற சிறிய துறைமுகம்,

நாவாந்துறை  எனும் சோனகர்   தெருவுக்கு அருகே உள்ள  ஊர்

 

பெ ரிய  கடையில்  பலவிததக் கடைகள்.

பெரியதும் சின்னதுமாய் மீன்கள் அங்குண்டு

 

அத்தியடி           பிள்ளையார்  கோவில்

அத்தி  மரத்துக்கு போதி  மரம் என்றும்  பெயர்

 

சிராம்பியடி கொட்டடி,  அத்தியடி ,ஊர்களில   ,

செல்லடி   வாந்கியோர்  பலருண்டு

 

சண்டினால் சுருங்கும்  சுண்டி தாவரம் இங்குண்டு

சுண்டி இழுக்கும் சுண்டுக்குளி மகளிர்     பார்வையும்  உண்டு

 

அரிந்த மரக்கச்  சாலைகள்  நிறைந்து இருநது  இருந்த ஊர்

அரியாலை ,கொழும்புத்துறை கடல்கள்  சந்திக்கும் ஊர்

 

கொழும்பில்  இருந்து   வந்த தோணிகள்

கொ ழும்புத்துறையில் வந்து தரித்தன ஒரு காலம்

 

ஈச்ச மரத்தை மொட்டை  அடித்து  பழம் உண்டு

ஈச்ச மோட்டை  என மருவியது   அப்பகுதி

 

கொய்யா மரம் நிறைத்த  கொய்யா த் தொட்டம்

கோடீஸ்வரர் வீடுகள் பல அங்குண்டு

 

குருநகராம்   கடலோரக்  கரையூர்

குருகுலத்தோர்  வாழும் இடம்

 

கோட்டையடி  கொட்டடியாக மாறினாலும்

கொட்டடி முனியப்பர்  நினைவுஇன்றும் மாறவில்லை

 

வேப்பம் மரங்கள்  ஓங்கி வளர்ந  வேம்படி

வடிவான மாணவிகள்  அங்குண்டு

 

கன்னார்   என்ற பாத்திரதொழில்  செய்வோர்  வாழ்ந்த

கன்னாதிட்டி காளி அம்மன்  குளத்தடி

 

நேற்று இருந்த பெயர்கள் காலத்தோடு மாறினாலும்

நேசம் உள்ள  எம்  யாழ்ப்பாணம்  என்றும் மாறாது. 

*****

News

Read Previous

தோஹாவில் இலவச பல் மருத்துவ முகாம்

Read Next

அருஞ்சொற்பொருள்

Leave a Reply

Your email address will not be published.