1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

எல்லோரையும் ஈர்த்திட ……….

எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்​டேன் இப்பாடலில்​…. உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே                உதவியைக் கேட்டால் “ஆமாம்” தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம்              தகுதிகள் நிரம்ப உண்டு விடைதரும் பாங்கிலே உன்னிடம் எவருமே             விரைவிலே நட்பு கொள்வர் நடைபெறும் நிகழ்வினை மறைத்திடா உறுதியில்…

உலகக் கோப்பை வென்ற நாம்; ஊழல் குப்பையையு​ம் விரட்டுவோம் !

காந்தியுடை(ய) நாண யத்தை             காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில்           கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக்            காட்டிய சத்யப் போரில் காந்தியவா(தி) அன்னா பாரீர்           களத்திலே உதவ வாரீர் கண்ணாகப் போற்றும் நாட்டில்                    களவுகள் விரட்ட வேண்டி…

காந்தி

காந்தியுடை(ய) நாண யத்தை             காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில்           கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக்            காட்டிய சத்யப் போரில் காந்தியவா(தி) அன்னா பாரீர்           களத்திலே உதவ வாரீர் கண்ணாகப் போற்றும் நாட்டில்                    களவுகள் விரட்ட வேண்டி…

ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்

காய்-காய்-காய்-காய்-மா-தேமா வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்   எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான் தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான் கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை சாப்பாடு கேட்டவர்கள் வரிசையில் நிற்பதுவே சாந்த எல்லை   எல்லார்க்கும் கிடைத்திடவே தேவைக்கும் அதிகமாக…

சோம்பலை விலக்கு; வெற்றியே இலக்கு

  இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து           இடைவரும் சோம்பலை யொழித்து கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக்       களத்தினு ளிறங்கினால் வெற்றி விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து       விதைத்திடு மனத்தினுட் பதிந்து துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால்       துவக்கிடுப் புள்ளியும் முன்னால்    …

கவர்ச்சிகள் உதவிட வாரா

கண்ணிலே தெரியும் ஈர்ப்புடைச் சாந்தம்              கவர்ந்திடும் பொழுதினில் காந்தம் வெண்ணிலா கீழே இறங்கியே வந்து               வெளிச்சமே காட்டிடும் முகமும் பெண்ணிடம் கண்டு மென்னுளம் சொல்லும்               ” பிழையிவை கண்டதெல் லாமே மண்ணிலே பிறந்த சதையிலே இல்லை               மகிழ்வெலா முயிரின் ஆக்கமே.”   இறைவனி…

இறையற்புதம்

தூணின்றி வானத்தை அந்தரத்தில் நின்றிடவேத் தாங்கும் நீதான் *ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான் நாணின்றி அம்பெய்திட முடியாது; உன்னன்பின்(றி) நானு மில்லை ஊணின்றி வாடுகின்றப் பயிரைப்போ லானேனே உன்னை நாடி     பாலையில் வாழுகின்ற ஒட்டகத்தி லுன்னருளைப் பார்த்துக் கொண்டேன் சோலையில் விளைகின்ற பூக்களிலே…

இறைவன் நாட்டம்

காய்ச்சீரும் மாச்சீர் தேமா (அரையடிக்கு) விளமுடன் மாச்சீர் தேமா (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் பாடல் வளமுடன் விருத்தம் தேடல்   உடுக்கையும் களைந்து விட்டால்         உன்னிடம் நாணம் போகும்; அடுக்கடுக்காய்ச் சேர்த்தச் செல்வம்       அழிந்திடும் நேரம் வந்தால்; படுத்திட்ட வீடும் போனால்       படுப்பதுத் தெருவின்…

சிந்தனைத் துளிகள்….!!!!!!!!

காய் , காய் , காய் , காய் , மாச்சீர் , தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்   தெளிவாக சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத் தெரிவு செய்வாய் களிப்பான நேரத்தில் இறைவனது வழிபாட்டுக் கடமை செய்வாய்    வெளிப்பார்வைப் பேச்சினிலே மயங்காது நண்பரிடம் விரக்தி கொள்வாய்  –  குளிப்பாட்டும் …

என் எண்ணங்கள் இனிய பாடலாய்…….

மா, மா, மா, மா, மா, காய்ச்சீர் வாய்பாட்டில் அமையும் விருத்தம்   அழகுத் தமிழில் பேசும் பொழுது              அமுதம் விளைவதுவே பழகும் நட்பில் தூய்மை நிறைந்தால்             பண்பேத் தெரிவதுவே மழலை மொழியே கவிதை மகிழ்ச்சி              மனதில் பூரணமே உழவர் பலனே பூமிச் சிரிக்க…