இராமநாதபுரம்
புதிய நிழற்குடையை அமைச்சர் திறந்து வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் விளங்குளத்தூர் ஊராட்சியில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய நிழற்குடையை தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வேல்முருகன் மற்றும் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





