இராமநாதபுரம்

வேலை நிறுத்த போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் 18 நிரந்தர துப்புரவு பணியாளர்களும் 17 தற்காலிக துப்புரவு பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.18 நிரந்தர துப்புரவு பணியாளர்களில் 6 மாற்று சமூகத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிக்கு வருவதில்லை. அவர்களுக்கு மாற்றுப் பணி கொடுக்கப்பட்டுள்ளது.அவர்களும் துப்புரவு பணி வேலைக்கு சேர்ந்து மாற்று வேலை செய்வதாகவும், அவர்களும் தங்களுடன் துப்புரவு பணிக்கு வர வேண்டுமென கடந்த 10 ஆண்டு காலமாக 12 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.6 நிரந்தர துப்புரவு பணியாளர்களும் துப்புரவு பணிக்கு வந்து மாற்று வேலை செய்வதால் தங்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளதாக கூறி இன்று கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
12 நிரந்தர துப்புரவு பணியாளர்களுடன் 17 தற்காலிக துப்புரவு பணியாளர்களும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்
இதனால் கமுதியில் துப்புரவு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button