கவிதைகள் (All)
உத்தமர் திருவள்ளுவர் வாழியே !

உத்தமர் திருவள்ளுவர் வாழியே !
“””””””””””””””””””””””””””””””””””””””””””
உன்னத மொழியாம் தமிழில்
உலக பொது மறையாம் குறளை
மானிடம் பயனுற படைத்தவராம்
உத்தமர் திருவள்ளுவர் வாழியவே

அகரமுதல எழுத்தெல்லாம்—-என
தொடங்கி அதிகாரங்கள் நூற்றி
முப்பத்து மூன்றில் அறம், பொருள்
இன்பம் முப்பாலில் அகிலத்தை வைத்தார் உத்தமர் திருவள்ளுவர் வாழியவே
மதம், இனம், சாதி,வேறுபாடு
மனித வாழ்வுக்கு கேடு
என்றே மனிதநேயம் சொன்னவர்
உத்தமர் திரு வள்ளுவர் வாழியவே
தஞ்சை. ந. இராமதாசு