முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு 10 நாள் அகப்பயிற்சி

முதுகுளத்தூர் அரசுமேல்
நிலைப்பள்ளிபொறியியல்பிரிவுமாணவர்களுக்கு10 நாள் அகப்பயிற்சி
முதுகுளத்தூர்; இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்
பள்ளி பொறியியல்
பிரிவுமாணவர்களுக்கான10 நாள் அகப்பயிற்சி நடைப்பெற்று நிறைவு பெற்றது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவின்
பேரில் இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்பிரின்ஸ் ஆரோக்கியராஜ் வழிகாட்டிதலின் படி, மாவட்ட தொழிற்கல்வி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் மேற்பார்வை
யில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்
பள்ளி தொழிற்கல்வி பன்னிரெண்டாம் வகுப்பு அடிப்படை இயந்திரவியல் பொறியியல் பிரிவு மாணவர்
களுக்கு தினமும் 8 மணிநேரம் வீதம் 10 நாட்கள் 80 மணிநேரம்
முதுகுளத்தூரில் உள்ள ஸ்ரீசபரிவெல்டிங்ஒர்க்ஸ்-ல் அகப்பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியை நிறுவன உரிமையாளர் பாலராஜ் வழங்கினார். இதில் ஆர்க் வெல்டிங், கேஸ் வெல்டிங், ட்டிரில்லிங், கிரைண்டிங் உட்பட பல்வேறு பயிற்சியை அளித்தார். இப்பயிற்சியின் மூலம் பொறியியல் பிரிவுமாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கும்,சொந்தமாக சுயதொழில் தொடங்குவதற்கும், ஆளுமை திறனை வளர்ப்பதற்கும்பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள்.இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சந்தான வேலு, தொழிற்கல்வி ஆசிரியர் மங்களநாதன் செய்திருந்தனர்.





