தமிழ்நாடு

ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான்

ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான்

ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் ஆவார். இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை. 1968ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி பிறந்தார்.

தந்தையார் பெயர் முகமது யாசின் (ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்), தாயார் பெயர் ஜெகபர்நிஷா ஆகியோர் மறைவு.

இவரது துணைவியார் பெயர் ஷமிம் நிஷா, ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி மன்ற 10வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் (1986 – 1989) பி.எஸ்சி பட்டம் பெற்றவர். கணினி அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்துள்ளார்.

சிறு வயது முதலே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் பணியாற்றி வருகிறார்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை
அருகே உள்ள திருமங்கலக்குடியில்
ஆறு நண்பர்கள் இணைந்து உருவாக்கிய
அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நிறுவன செயலாளராக கல்வி சேவையாற்றி வருகிறார்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் உரையாடும் ஆற்றல் பெற்றவர்.

மஹல்லா ஜமாஅத்தினுடைய கூட்டமைப்பிற்கு தலைவராக சேவையாற்றி வருகிறார்.

உளுந்தூர்பேட்டை அருகே உருவாகி வரும் ஸாலிஹீன் மருத்துவ கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவன அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக பொறுப்பேற்று சேவையாற்றி வருகிறார்.

சவூதி அரேபியா, அமீரகம், குவைத், பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்.

கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டினை வரவேற்பு குழு தலைவராக பொறுப்பேற்று பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையோடு தமிழகமே வியக்கத்தக்க வகையில் சிறப்பாக நடத்தி உள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் பாபநாசம் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்டு 1065 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று த.வெ.க. அமைச்சர்
அவையில் இடம் பெற
உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button