கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியின் ஆறாவது விளையாட்டு தின விழா

பரமக்குடி, பாம்பூர் கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியின் ஆறாவது விளையாட்டு தின விழா
பரமக்குடி, பாம்பூர் கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியின் ஆறாவது விளையாட்டு தின விழா
“ஆறாவது விளையாட்டு தின விழா – 2026”
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள பாம்பூர், கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியக்கூடத்தில் ஆறாவது விளையாட்டு தின விழா மிகச் சிறப்பாகவும், எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் நடைபெற்றது.
இந்த விழாவில் துபாயைச் சேர்ந்த பத்திரிகையாளர் முகம்மது ஹிதாயத்துல்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
பள்ளிக்கூடத் தலைவர் கண்ணதாசன் பாண்டியன் மற்றும் தாளாளர் ஹேமலதா கண்ணதாசன் ஆகிய இருவரும் தலைமை தாங்கினர்.
பள்ளிக்கூட முதல்வர் அனிதா, துணை முதல்வர்கள் ஜோய்ஸ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் அவர்கள் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு வீர விளையாட்டுப் போட்டிகள், உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக்கூடத் தலைவர் கண்ணதாசன் பாண்டியன் மற்றும் தாளாளர் ஹேமலதா கண்ணதாசன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.
பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள்,மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
“வெற்றி என்பது பதக்கத்தில் மட்டும் இல்லை; முயற்சியிலும், பங்கேற்பிலும், விடாமுயற்சியிலும் உள்ளது.”
மாணவர்களின் விளையாட்டுத் திறனையும், கலைத் திறனையும் வெளிப்படுத்திய இந்த விழா, அனைவரின் பாராட்டையும் பெற்றது.













