இராமநாதபுரம்
நவாஸ் கனி எம்.பி. நன்றி தெரிவித்தார்

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில்IUML.கட்சியை சேர்ந்த வேட்பாளர்நவாஸ்கனி, ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற செய்த அபிராமம் பேரூர் கழக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அபிராமத்தில் அமைந்துள்ள தெய்வீக திருமகன், பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அபிராமம் பேரூர் கழக பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றினை தெரிவித்தார். உடன் கமுதி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வாசுதேவன், அபிராமம் பேரூர் கழக திமுக செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





