General News

சென்னையில்அமைதி பேரணி

சென்னையில்அமைதிபேரணி !

இஸ்ரேலின்போருக்கு எதிராகவும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு இரங்கல்_தெரிவித்தும்…

தமிழ்நாடு ஷியா ஜமாத் நடத்திய மாபெரும் அமைதி பேரணி !

மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி_பங்கேற்பு !

அக்டோபர்.05,

இஸ்ரேலின் லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய பயங்கரவாத யுத்தம் ஓராண்டு நீடிக்கும் நிலையில், போருக்கு எதிராக உலகம் முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது.

இன்று தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் சார்பில் சென்னையில் – ராயப்பேட்டையில் பல்லாயிணக்கான மக்கள் பங்கேற்ற அமைதி பேரணி ஷியா காசி குலாம் முஹம்மது மெஹதி தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களும் பங்கேற்றனர்.

அமைதிப் பேரணிக்கு முன்பாக, இந்திய தேசியக் கொடியை ஏந்தி போராட்டக் குழுவினர் செல்ல, பின்னே பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிப்பூர்வமாக அணிவகுத்து இஸ்ரேலுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

இதில் இஸ்ரேலின் பயங்கரவாத போரில் கொல்லப்பட்ட தியாகிகளுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் இரங்கல் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பேரணி ஐஸ் ஹவுஸிங் பல்வேறு பகுதிகளின் வழியே சுற்றி வந்து புதுக் கல்லூரியை நோக்கி திரண்ட போது சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு கூட்டம் ஆண்களும், பெண்களுமாக சாரையாக திரண்டது.

முடிவில் காவல்துறை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்ய தொடங்கியது.

பல்லாயிரக்கணக்கான மக்களை கைது செய்ய முடியாததால் குறிப்பிட்ட சிலரை மட்டுமே காவல்துறை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது .

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மிகப்பெரிய ஒன்று கூடலாக இந்த பேரணி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் மஜக மாநிலச் செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர்கள் அரிமா அசாருதீன், பேரா. அப்துல் சலாம், தாம்பரம் தாரிக் மற்றும் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகளும், ஐஸ் ஹவுஸ் பகுதி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் :

மஜகதகவல்தொழில்நுட்ப_அணி

MJK_IT_WING

மத்தியசென்னைகிழக்குமாவட்டம்

05.10.2024

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button