கீழக்கரையில் நின்று கொண்டிருந்த கார் மீது மற்றொரு கார் அதிவேகமாக மோதியதில் இரண்டு காரில் இருந்த ஐந்து பேர் உயிரிழப்பு

கீழக்கரையில் நின்று கொண்டிருந்த கார் மீது மற்றொரு கார் அதிவேகமாக மோதியதில் இரண்டு காரில் உள்ள ஐந்து பேர் உயிரிழப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தேசிய நெடுஞ்சாலையில் டிச,6அன்று அதிகாலை ஆந்திரா மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்த ஐயப்பன் பக்தர்கள் வாகனம் கீழக்கரை ECR சாலை அருகே காரை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது, கீழக்கரை சேர்ந்த வாகனம் ஏர்வாடியில் இருந்து அதிவேகமாக வந்து பின்புறம் மோதியதில் சம்பவ இடத்தில் ஐயப்பன் பக்தர்களும் 4 பேரும், கீழக்கரையை சேர்ந்தவரும் காரில் 1 நபரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கீழக்கரை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
காவல்துறையினர் விரைந்து வந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இறந்த சடகங்களையும், உயிருக்கு போராடியவர்களையும் மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் கீழக்கரை பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.



