இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

முதுகுளத்தூர் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி +1 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு டிச,4 இன்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் எஸ் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார். தாளாளர் எஸ் ஜஹாங்கீர் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்வி குழு தலைவர் காஜா நஜிமுதீன், தொடக்கப்பள்ளி தாளாளர் காஜா கமர்தின், நர்சரி பள்ளி தாளாளர் பாசில் அமீன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் அ ஷாஜகான் மற்றும் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றி, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினர் நன்றி உரையை பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என். காஜா நிஜாமுதீன் குரேஷி கூறினார் இந்நிகழ்ச்சியில் கல்வி குழு ஆடிட்டர் இக்பால் உறுப்பினர்கள் ரியாஸ், சக்கரியா உதவி தலைமை ஆசிரியர்கள் என் காமிலா பானு, ஜாகிர் உசேன், இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button