கட்டுரைகள்
நூல்கள்: தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நால்கள்

நூல்கள்: தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நால்கள்

தமிழரின் அறிவுக் கருவூலங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் நோக்குடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ் மின் நூலகத்தில் (https://tamildigitallibrary.in )இதுவரை இலட்சக்கணக்கான அரிய நூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் மின்பதிப்பாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இப்பெரும் பணியின் ஒரு பகுதியாக நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 37 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் கீழ்க்காணும் 14 அறிஞர்களின் படைப்புகள் தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- இரா. இளங்குமரனார்
- செ. இராசு
- கந்தர்வன்
- செ. திவான்
- தஞ்சை பிரகாஷ்
- நா. மம்மது
- நெல்லை கண்ணன்
- விடுதலை இராசேந்திரன்
- சோமலெ(சோம. லெட்சுமணன்)
- இரா. மோகன்
- கு. கோதண்டபாணி பிள்ளை
- அம்சவேணி பெரியண்ணன்
- மா.சு. சம்பந்தன்
- கோ. முத்துப்பிள்ளை