ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

Vinkmag ad

ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

முதுகுளத்தூர், மார்ச் 28–

முதுகுளத்தூர்–வெங்கல குறிச்சி, மீசல் வழியாக பரமக்குடிக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது அதிகரித்துள்ளது.

முதுகுளத்தூர்– வெங்கல குறிச்சி, பொசுக்குடி, மீசல், பிரபக்களூர், கொளுந்துரை வழியாக பரமக்குடிக்கு 30–க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் அரசு தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. ரோடு சேதத்தால் 32 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் பயணிக்கும் அவலம் உள்ளது.

இதனால் இப்பகுதி மாணவர்களை தவிர பொதுமக்கள் பல கூடுதல் செலவினத்தையும் பொருட்படுத்தாமல் அரசு தனியார் பஸ்கள் பயணிப்பதை தவிர்த்து ஆபத்தையும் பொருட்படுத்தாமல், தங்களது டூவீலர் சரக்கு வானங்களில் பயணிகள்கும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ரோடு சேதத்தால் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்துக்களில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இரவு நேர பயணித்தை தவிர்க்கும் நிலைக்கு, இப்பகுதியினர் ஆளாகியுள்ளனர்.

இது குறித்து செம்பொன்குடி தாஸ் கூறுகையில், முதுகுளத்தூர்– மீசல், பிரபக்களூர், செம்பொன்குடி செல்லும் ரோடு சேதமடைந்த நிலையிலேயே பல ஆண்டுகளாக உள்ளது. ரோது சேதம் இதுவரையில் சீரமைக்கப்படாததால் கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் ரத்து செய்யப்படும் அபாயத்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

News

Read Previous

வஃபாத்து செய்தி

Read Next

விஷம் குடித்து பெண் சாவு

Leave a Reply

Your email address will not be published.