முதுகுளத்தூர் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்

Vinkmag ad

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களுக்குள்பட்ட பள்ளிகளில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. அந்தந்த பள்ளிக்களில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர்கள் வரவேற்றனர். ஒன்றியத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிரநிதிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் முதுகுளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்து மடிக்கணினிகளை வழங்கினார். அதன்படி, செல்வநாயகபுரம், காக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 96 மாணவிகள். கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 62 மாணவ,மாணவிகள். அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 113 பேர், கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 194 மாணவ, மாணவிகள். சிக்கல், ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 394 மாணவ, மாணவிகள். சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 161 மாணவர்கள். சாயல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 194 மாணவிகள்.  டி.மாரீயூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 27 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 1131 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

News

Read Previous

ஸபர் மாதம்

Read Next

பாரதியும் ஏவிஎம்மும் – சில உண்மைகள்

Leave a Reply

Your email address will not be published.