முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

Vinkmag ad

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட, அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

   அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த கீர்த்திகா முனியசாமி, தொகுதியின் தேர்தல் துணை அலுவலர் கே.கே. கோவிந்தனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின்போது, கமுதி பாசறை செயலர் வி.கே.சி. முத்துராமலிங்கம் முன்மொழிந்தார்.

  வேட்பாளருடன், மாவட்டச் செயலர் ஆர். தர்மர், எம்.எல்.ஏ. முருகன், தொகுதி செயலர் காளிமுத்து, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம். சுந்தரபாண்டியன், மாவட்டக் கவுன்சிலர் சதன்பிரபாகர் ஆகியோர் இருந்தனர்.

  இவரது கணவர் முனியசாமி மாற்று வேட்பாளராக தேர்தல் துணை அலுவலர் கே.கே. கோவிந்தனிடம் மனு தாக்கல் செய்தார்.

வேட்பாளரின் சொத்து மதிப்பு விவரம்

    கையிருப்பு ரூ. 1 லட்சம், வங்கிக் கணக்கில் ரூ.1,28,630. அசையும் சொத்து மதிப்பு ரூ. 47 லட்சத்து 11 ஆயிரத்து 802. அசையா சொத்து ரூ. 3 லட்சம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

News

Read Previous

கழிவு

Read Next

திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published.