முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கீர்த்திகா போட்டி

Vinkmag ad

keerthikaமுதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார்.

இவர் தற்போது பரமக்குடி நகர் மன்ற தலைவராக இருந்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகள் அதிமுக-வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

227 தொகுதிகளில் ஜெயலலிதா உள்பட 31 பேர் பெண் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் குறிப்பிடத்தக்கவர்கள்.

பெண் வேட்பாளர்கள் பெயர் பட்டியல்கள் விவரம்:

1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ஜெயலலிதா

2. சேப்பாக்கம் – நூர்ஜஹான்

3. ஆயிரம்விளக்கு – பா.வளர்மதி

4. அண்ணாநகர் – கோகுல இந்திரா

5. தியாகராயநகர் – சரஸ்வதி ரெங்கசாமி

6. காஞ்சிபுரம் – மைதிலி திருநாவுக்கரசு

7. குடியாத்தம் (தனி) – ஜெயந்தி பத்மநாபன்

8. ஊத்தங்கரை (தனி) – மனோரஞ்சிதம் நாகராஜ்

9. ஏற்காடு – சித்ரா

10. வீரபாண்டி – மனோன்மணி

11. ராசிபுரம் (தனி) – சரோஜா

12. திருச்செங்கோடு – பொன். சரஸ்வதி

13. வால்பாறை (தனி) – கஸ்தூரி வாசு

14. கிருஷ்ணராயபுரம் (தனி) – கீதா

15. ஸ்ரீரங்கம் – வளர்மதி

16. திருச்சிராப்பள்ளி (மேற்கு) – தமிழரசி

17. மண்ணச்சநல்லூர் – பரமேஸ்வரி முருகன்

18. துறையூர் (தனி) – மைவிழி

19. பண்ருட்டி – சத்யா பன்னீர்செல்வம்

20. புவனகிரி – செல்வி ராமஜெயம்

21. கரைக்குடி – கற்பகம் இளங்கோ

22. சீர்காழி (தனி) – பாரதி

23. கீழ்வேலூர் (தனி) – மீனா

24. திருத்துறைப்பூண்டி (தனி) – உமா மகேஸ்வரி

25. மன்னார்குடி – சுதா

26. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – சந்திரபிரபா

27. முதுகுளத்தூர் – கீர்த்திகா முனியசாமி

28. விளாத்திகுளம் – உமாமகேஸ்வரி

29. சங்கரன்கோவில் (தனி) – ராஜலெட்சுமி

30. கிள்ளியூர் – மேரி கமல பாய்

31. ஆலங்குளம் – எப்சி கார்த்திகேயன்

News

Read Previous

பயணம்

Read Next

பாராட்டு…

Leave a Reply

Your email address will not be published.