பாராட்டு…

Vinkmag ad

சாட்டையாக மாறும் பாராட்டு

திறமைக்கு திரை அகற்றி,

ஆற்றலை ஆழம் செய்து….

தவறி வரும் தவறுகளை,

துறவறம் செய்து…

நல்ல வாய்ப்புகளுக்கு,

வடிகால் செய்து….

சிகரத்தை முத்தமிட,,,

ஊக்கத்தை விரிவு செய்து….

அகண்டமாக்கிய விசாலப்பார்வையால்,

விண்ணை தொட செய்து..

தாழுணர்வை  தளர்த்தி,,,,

தன்னம்பிக்கையை  முளைக்க செய்து..

இருட்டில் வாழும் மனிதனுக்குள்,,,

வெளிச்ச உண்டியல் உடைந்து….

வர மறுக்கும் ஆர்வத்தை,,,,

அழையா விருந்தாளியாக செய்து….

பாறையை செதுக்கும் உளியாய்,,,

செயல்களை திறன்களாய் செதுக்கி,,,

சாமானியன் சக்திமானாய் சுழல,,,

பம்பர சாட்டையாக மாறும், பாராட்டு…

எ.ஹ. யாசிர் ஹசனி, லால்பேட்டை,

அபுதாபி.

31/03/2016

News

Read Previous

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கீர்த்திகா போட்டி

Read Next

தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு

Leave a Reply

Your email address will not be published.