முதுகுளத்தூர், கடலாடி, கமுதி தாலுகாக்களில் மழை நீடிப்பு

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி,  முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய தாலுகாக்களில் இன்று(சனிக்கிழமை) 4-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. இதையொட்டி விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வங்காளவிரிகுடா கடலில் தாழ்வான காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து இரவு, பகலும் மழை அதிகமாகவும், குறைவாகவும் மாறி, மாறி பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதன் கிழமை முதல் 3 நாள்கள் தொடர்ந்து கமுதியி்ல் பெய்த மழை அளவு13.7 மி.மீ, 35 மி.மீ, 63.5 மி.மீ. ஆகும். முதுகுளத்தூரில் 2 நாள்கள் 52 மி.மீ, 11.4 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது. கட லாடியி்ல் 3 நாள்கள் தொடர்ந்து 4 மி.மீ, 18 மி.மீ, 29.8 மி.மீ. அளவும், வாலிநோக்கத்தில் 5.6 மி.மீ, 23.2 மி.மீ, 37.5 மி.மீ. அள வும் மழை பெய்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக,. விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

விதைப்பு மற்றும் நடுகை நெற்பயி்ர்கள் பசுமையாக வளர்ந்து வருகின்றன. இதே போன்று சோளம், கம்பு, கேப்பை, நிலக்கடலை, எள்ளு, பருத்தி, மல்லி உள்ளிட்ட பயிர்களும் நன்கு வளர்ந்துள்ளன. கண்மாய்களில் தண்ணீர் பெருகி இல்லாத நிலையில் மழை இன்னும் சில நாள்கள் அடுத்துடுத்து மழை பெய்தால், விவசாயம் திருப்தியாக அமையும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே சமயம் கண்மாய்களுக்கும் தண்ணீர் வந்து பெருகினாலும் அதிக மகசூல் பெற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர் மழையால் ஆங்காங்கே ரோடுகள் குண்டும், குழி யுமாகி, சேறும், சகதியும் நிறைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரோடுகள் ஓரம் மண் அரி்ப்பு அதிகமாகி, வாகன விபத்துகள் அபாயமும் உருவாகி உள்ளது. மழையால் வாரச்சந்தைகள் வியாபாரமும் முடங்கி உள்ளது.

News

Read Previous

கிழவனேரியில் “அம்மா’ திட்ட முகாம்

Read Next

தமுமுக ஆலோசனைக் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published.