கிழவனேரியில் “அம்மா’ திட்ட முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே பிரபக்களூர் குரூப், காக்கூர் பிர்காவைச் சேர்ந்த

கிழவனேரியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவின் பேரில் கிழவனேரியில் நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டாட்சியர் எஸ்.ராமூர்த்தி தலைமை வகித்தார். முகாமில் பயனாளிகளிடமிருந்து 21 மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் தகுதியானவையாக தீர்மானிக்கப்பட்டன. குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் தொடர்பான அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டன.

முகாமில் சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பவானி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், மண்டல துணை வட்டாட்சியர் சதீஸ்குமார், கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மத்தியல் கிராமத்தில்

கடலாடி வட்டம் சிக்கல் குரூப் மத்தியல் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கடலாடி வட்டாட்சியர் ரவிராஜ் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ஆர்.ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். முகாமில் 47 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டன. முகாமில் வட்ட வழங்கல் வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் சீனிமுகம்து, கிராம நிர்வாக அலுவலர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

2015 அரசு பொது விடுமுறை நாட்கள்

Read Next

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி தாலுகாக்களில் மழை நீடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *