முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு ரூ.3.50 லட்சம் நிவாரணப்பொருள்கள் வழங்கல்

Vinkmag ad

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு ரூ.3.50 லட்சம் நிவாரணப்பொருள்கள் வழங்கல்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு சார்பாக சேகரிக்கப்பட்ட 3.50 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

  சென்னை, கடலூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள், போர்வைகள், பருப்பு, சீனி, அலுமினிய பாத்திரங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கான பொருள்களை கூட்டமைப்பு சேகரித்து இருந்தது. இந்த பொருள்கள் வியாழக்கிழமை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், முதுகுளத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி தலைமையில், அதிகாரிகள் எம். ராதாகிருஷ்ணன், வி.எஸ். வெங்கடேசன், மணலூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராமர், கௌன்சிலர் செந்தில்குமார், அதிமுக இளம் பெண்கள் பாசறை செயலர் மாரி, அண்ணா தொழிற்சங்க செயலர் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

துபாயில் நடந்த முதுவை சங்கமம் 2015

Read Next

முதுகுளத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *