முதுகுளத்தூர் : இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

Vinkmag ad

முதுகுளத்தூர் ஒன்றிய வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

 

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முதுகுளத்தூர் ஒன்றியம் கீழத்தூவல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முன்னால் எம்.எல்.ஏ பதினெட்டாம்படியான் மகன் டாக்டர் பன்னீர் செல்வம் அதிமுக சார்பிலும்,இவரை எதிர்த்து பாஜக சார்பில் சூடாமணியும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் சூடாமணி வேட்பு மனுவை வாபஸ் பெற்று விட்டார். இதனால் டாக்டர் பன்னீர் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல் நல்லூர் ஊராட்சியில் 5வது வார்டில் போட்டியின்றி பால்மேலியும், கீழக்கொடுமலூர் ஊராட்சியில் 2வது வார்டில் பழனிவேலும், 3வது வார்டில் செல்வியும், 4வது வார்டில் வள்ளியும், 5வது வார்டில் மணிமேகலையும், 8வது வார்டில் ஜானகி ஈஸ்வரியும், 9வது வார்டில் ஆராயியும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர்.

தேரிருவேலி ஊராட்சியில் 3வது வார்டில் முனியசாமி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். கொளுந்துரை ஊராட்சியில் 3வது வார்டில் இருளாயி தேர்வாகியுள்ளார். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் நாகேஸ்வரன், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.

News

Read Previous

முதல்வனும் நீயே அன்றோ!

Read Next

உங்க ஏரியா போஸ்ட் மேன் யார்…?

Leave a Reply

Your email address will not be published.