மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

Vinkmag ad

முதுகுளத்தூர் மற்றும் கடலாடி தாலுகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1249 மாணவ, மாணவியருக்கு திங்கள்கிழமை தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். முருகன் வழங்கினார்.

கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 58 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜபூபதி அனைவரையும் வரவேற்று பேசினார். திருவரங்கம் தூய இருதய மேல்நிலப் பள்ளியில் 145 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் பீட்டர் ராயப்பன் அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார். அலங்கானூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 37 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை விஜிலா அனைவரையும் வரவேற் பேசினார். தேரிருவேலி ராவுத்தர் சாகிப் மேல்நிலைப் பள்ளியில் 50 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் முகம்மது அலி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சுதந்திரா காந்தி இருளாண்டி, கவுன்சிலர் சரஸ்வதி செந்தில்குமார், தூரி ஆர். மாடசாமி, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலர் சேதுபதி, ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் மலைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் கடலாடி தாலுகா சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 204 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் பிராங்கின் ஜேக்கப் வரவேற்று பேசினார். சாயல்குடி ஒன்றிய செயலர் ஏ.எஸ்.பி. அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 236 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியை அனுசுயா வரவேற்றுப் பேசினார். கன்னிராஜபுரம் மேல்நிலைப் பள்ளியில் 210 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியை ராஜலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். டி மாரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 47 மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான்தெத்யூஸ் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கத் தேவர், பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 121 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் சாய்பெல் அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார். கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 141 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்பள்ளித் தலைமை ஆசிரியர் சுரேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்றிய கழகச் செயலர் முனியசாமி பாண்டியன், கவுன்சிலர் செந்தூர்பாண்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயச்சந்திரன், தொழிற்கல்வி ஆசிரியர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி. திட்ட ஒருங்கிணைப்பாளர் வி. சொக்கர் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். முருகன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

News

Read Previous

முதுகுளத்தூரில் மழை வேண்டி கஞ்சிக் கலய ஊர்வலம்

Read Next

முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா

Leave a Reply

Your email address will not be published.