போலீஸ் போல் நடித்து பேருந்தில் பயணம் செய்த இளைஞர் கைது

Vinkmag ad

முதுகுளத்தூரில் போலீஸ் போல் நடித்து அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

  முதுகுளத்தூர் அருகே உள்ள பிரபக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சோனை மகன் ஜெயபால் (25). இவர் தனது ஊரில் இருந்து முதுகுளத்தூருக்கு வரும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது நடத்துநர் இவரிடம் பயணச் சீட்டு எடுக்க கேட்ட போது தான் ஊர்க்காவல் படையில் பணி புரிந்து வருவதாக கூறி போலியான அடையாள அட்டையை காட்டினாராம். இதையடுத்து நடத்துனருக்கும் ஜெயபாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் மூக்கன் விசாரித்த போது ஜெயபால், மாவட்ட எஸ்.பி. கையெழுத்தை போல் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்தார். இதன் பேரில் ஜெயபால் மீது வழக்குப் பதிந்து முதுகுளத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

News

Read Previous

பி.அசரப் அலி மற்றும் முகம்மது இப்ராகிம் ( மன்னர் ) இல்ல மணவிழா

Read Next

“கொள்ளை’ போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published.