புறக்கணிக்கப்படும் ஒன்றிய கவுன்சிலர்கள் முதுகுளத்தூர் கவுன்சிலில் குற்றச்சாட்டு

Vinkmag ad
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திரா காந்தி தலைமையில், எம்.எல்.ஏ., முருகன், பி.டி.ஓ.,க்கள் குருநாதன், செந்தூர்பாண்டியன் முன்னிலையில் நடந்தது.
சிவக்குமார்: கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்படுபவை, பயனாளிகள் தேர்வு ஊராட்சி தலைவர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கபடுகிறது. ஒன்றிய கவுன்சிலர்கள் பரிந்துரைக்கும் பயனாளிகளுக்கு, இலவச வீடுகளை ஊராட்சி தலைவர்கள் ஒதுக்கீடு செய்வதில்லை. கிராம சபை கூட்டங்களில் ஒன்றிய கவுன்சிலர்கள்
புறக்கணிக்கப்படுகின்றனர். மொ. கடம்பன்குளம், கநதி, சிறுமணியேந்தல், விளக்கனேந்தல் ஆகிய கிராமங்களுக்கு சத்துணவு கூடங்களுக்கு சமையலறை வேண்டும்.
சரஸ்வதி: சாம்பக்குளம். வெங்கலகுறிச்சி, சாம்பக்குளம், பொலிகால் பகுதியில், குறைந்த அளவு நேரமே மும்முனை மின்சாரம் சப்ளை செய்யபடுவதால், விவசாயம் பாதிக்கபட்டுள்ளது.
கோபால்: திருவரங்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதியில்லை.
வேல்ச்சாமி: தேரிருவேலி ரோட்டோரங்கள், தெருக்களிலுள்ள மின்வயர்கள் தாழ்வாக தொங்குவதால் விபத்து அபாயம் உள்ளது.
தனசேகரன்: அம்மா திட்ட முகாமில் ஒதுக்கீடு செய்யபடும், அரசின் இலவச வீடுகள் முறையான பயனாளிகளுக்கு வழங்கபடுவதில்லை. ஊராட்சி தலைவர்களின் பாரபட்ச நடவடிக்கையால், உண்மையான பயனாளிகள் புறக்கணிக்கபடுகின்றனர். புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.ஆரோக்கியமேரி: புஷ்பவனத்தில் சேதமடைந்த பாலத்தை சீரமைப்பு பணி, தொய்வாக நடக்கிறது.
முருகன்: அபிராமம் விலக்கு ரோடு- செல்வநாயகபுரம் மேல்நிலைபள்ளி வரை தார் ரோடு அமைக்க வேண்டும்.தலைவர்: சிறுகுடி, விக்கிரமபாண்டியபுரம், வலசை, குடியிருப்பு, நல்லுக்குறிச்சி, காவல்கூட்டம், ஆம்பல்கூட்டம், கீழ, மேலக்கொடுமலூர், தட்டானேந்தல், பெரிய ஆணைக்குளம், விக்கினஉடைப்பு, முனியனேந்தல், தாதனேந்தல், கோனேரியேந்தல், கொட்டகுடி ஆகிய கிராமங்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை இல்லை. விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.பி.டி.ஓ.,: கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

News

Read Previous

பகைமை பலவீனம் – அன்பு ஆதரவு !

Read Next

சட்ட உதவி மையம் திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *