பகைமை பலவீனம் – அன்பு ஆதரவு !

Vinkmag ad

1623725_568799119855044_1152068486_nநம்ம ஆளுங்க சும்மா..சும்மா ஏதாவது சண்டை போடுவதும், புண்ணியமில்லாத விசயத்திற்கு பிரச்னை பண்ணுவது வழக்கமாகி விட்டது. இதனால் நாம் சாதிப்பது என்ன? ஒன்றும் இல்லை.

நாம் ஒருவரிடம் சண்டைப்போட்டு விலகி வாழ்வதைவிட, அனைவரிடமும் சேர்ந்து வாழும்போது கிடைக்கிற சுகம் இருக்கிறதே அலாதியானது. ஆனால் நாம் உணரமாட்டோம்….என்பது உண்மை.

சரி நாம சண்டைப்போடுவது இல்லை. ஆனால் பிரச்சனைகள் தானாக வருகிறதே! நாம் என்ன செய்ய முடியும்? என்று யோசிப்பது சரிதான். இருந்தாலும் நாம் பொறுமையையுடன் எந்த விசயத்தையும் கையாண்டால் வம்பிற்கு வேலையில்லை. நாம் பொறுமையாக இருந்தாலும் எதிராளி நம்மை அப்படி இருக்க விடுவதில்லை. காரணம் உணர்வுகளை தூண்டக்கூடிய வார்த்தையினால் நம்மை கோபப்பட வைத்துவிடுகிறார்கள். இதன் காரணமாகவே பலர் ஒதுங்கியே வாழ்கிறார்கள். இவர்களின் தொந்தரவு நமக்கு எப்போதும் வேண்டாம் என்று! இதுவே நாம் உறவுகளை விட்டு விலகி செல்ல வழிவகுக்கிறது.
இதனால் என்ன லாபம் ஈட்டிவிட்டோம்? உறவின் வீரியம் குறைந்ததுதான் மிச்சம்.

சிலர் அன்பாக பேசினாலும் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுகிறது. அவ்விடத்தில் சரியாக புரிந்து கொள்ளாததால் மோதல் உருவாகி பகை உண்டாகிறது. இப்படியே பலவிசயம்…ஆனால் எவரும் பகையுடன் வாழ்ந்து எதையும் கொண்டு செல்வதில்லை. ஆனால் நாளை மறுமையிலே இதற்கான கேள்வி கணக்குகள் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

காலச்சூல்நிலையில் எதிர்பாரதவிதமாக சண்டைகள் வருவதுண்டு. எதார்த்தமானது. ஆனால் அவைகளை மறந்து சமாதனம் செய்து அன்போடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பினால் ஆண்டவனின் அருகிலே போகலாம்! அன்பில்லாத உள்ளமும், அறம் இல்லாத கரங்களும் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. என்றும் அன்போடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். அன்போடு பழகுங்கள். உங்களின் வாழ்க்கையே சொலைவனமாகும்.

வேண்டாம் பகை! அது உங்களின் வாழ்வை அழித்துவிடும். உங்களை நிம்மதியில்லாமல் தினம் தினம் சாகடித்துக் கொண்டே இருக்கும்.
காயம்பட்ட சிரங்கை குணப்படுத்த முயற்சி செய்வதுபோல், உங்களிடம் ஏற்பட்ட பகையை ஒழித்து உங்களின் உள்ளத்தில் அன்பு என்கிற மலர் செடிகளை வளருங்கள். உங்களின் வாழ்வை தென்றலாக மாற்றும்.!

ஒவ்வொருவரின் மரணத்தின் இறுதியில் பகையை மறந்து அனைவரிடமும் அன்பாக இருக்கவேண்டும் என்பதே தலையாய நோக்கம். ஆனால் அதற்கு முன்னரே மரணம் அவர்களை வழியனுப்பி விடுகிறது. வேறெங்கே ஓன்று சேர்வது? ஆகவே முந்திக்கொள்ளுங்கள் அனைவரிடமும் அன்போடு வாழ்வதற்கு! உங்களின் அன்பான வாழ்வே சொர்க்கம் புகுவதற்கு அடித்தளமாகும்…!

பகை வேண்டாம் உங்களை மூடனாக்கி விடும்
அன்பு மட்டுமே போதும் நீங்கள் என்றென்றும் அறிவாளியாக இருப்பீர்கள்…!

.

 

News

Read Previous

விழுவது எழுவதற்கே – முதுவைக் கவிஞர்

Read Next

புறக்கணிக்கப்படும் ஒன்றிய கவுன்சிலர்கள் முதுகுளத்தூர் கவுன்சிலில் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *