சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Vinkmag ad

முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

  இரு சக்கரவாகன ஓட்டுநர்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் இப்பேரணி நடைபெற்றது. பேரணியை கமுதி ஏ.எஸ்.பி சஞ்சய் தேஜ்முக் சேகர் தொடக்கி வைத்தார்.

 பேரணிக்கு முதுகுளத்தூர் காவல்துறை ஆய்வாளர் குமரன் தலைமை வகித்தார்.

காவல்துறை ஆய்வாளர்கள் கடலாடி மோகன், கீழத்தூவல் ஜேசு, என்.சி.சி. திட்ட அலுவலர் துரைப்பாண்டியன், நுகர்வோர் மன்ற பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மங்கள நாதன், வர்த்தக சங்கத் தலைவர் வி.கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் காவல்துறையினர் என 300-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

 பேரணி, வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, பேருந்து நிலையம் , அரசு மருத்துவமனை வழியாக சென்று காந்திசிலை அருகே நிறைவு பெற்றது.

தேவகோட்டை: தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழா கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், மகளிர் காவல்நிலைய சார்பு- ஆய்வாளர் புவனேஸ்வரி, நகர போக்குவரத்துக் காவலர் கோகுல்ராஜ் ஆகியோர் சாலை விதிகள் குறித்து பேசினர்.

 நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவர் சந்திரசேகர், காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் வீரலெட்சுமி,மாணிக்கம்,விபத்து தடுப்புக்குழு அமைப்பாளர் ஏகோஜிராவ் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர் இளங்கோ நன்றி கூறினார்.

News

Read Previous

பொங்கலோ பொங்கல்

Read Next

முதுகுளத்தூரில் பொதுமக்களிடம் எம்.பி. குறைகேட்பு

Leave a Reply

Your email address will not be published.