மூளை

Vinkmag ad
ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் மூளை பேசுகிறேன். என்ன திகைத்துப் போய்விட்டீர்களா? உங்களுக்கு என்னை நல்லாத் தெரியுமென்று நினைக்கிறேன்… சரி தானே?
உங்கள் உடலின் தலைமைச் செயலகமும், கட்டுப்பட்டு மையமும் நானே. நரம்பு மண்டலத்தின் முக்கிய உறுப்பான நான், உங்கள் உடலின் பெரும்பாலான இயக்கங்களை (activities) நிர்வகிக்கிறேன். உங்கள் உடலுக்கு உள்ளேயிருந்தும், வெளியிலிருந்தும் பெறப்பட்ட எண்ணங்களையும் (thoughts), உணர்ச்சிகளையும் (emotions), அனுபவங்களையும் (experiences) தகவல்களையும் (information), நினைவுகளாக (memories) நீண்ட மற்றும் குறுகிய கால நினைவகத்தில் long and short term memory) சேமித்துச் செயலாக்குவதும் நானே. இதற்காகப் பகுத்தறிதல் (reasoning), பகுப்பாய்வு (analysis), தீர்வு காணுதல் (problem solving) உள்ளிட்ட அறிவாற்றல் திறன்களை (cognitive skills) பயன்படுத்துவது உண்டு. என்னைப் பற்றி நீங்கள் ஓரளவு தெரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? ஆனால் உங்களுக்கு என்னைப்பற்றிய முழுத் தகவல்களும் தெரியாது… அதுதானே உண்மை. இந்தப் பதிவில் என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள முயற்சி செய்துள்ளேன்
இப்படிக்கு
உங்கள் நான்…!

News

Read Previous

விருந்தோம்பல்

Read Next

வீரமாமுனிவர்

Leave a Reply

Your email address will not be published.