தினமும் இரண்டு வேளைதான் உண்ண வேண்டும்

Vinkmag ad
  • விழாவில் ஆரோக்கிய உணவுகள் குறித்த கையேட்டை அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை இயக்கக அதிகாரி டாக்டர் வேங்கட சுரேஷ் வெளியிட அதனைப் பெற்றுக் கொள்கிறார், மருத்துவமனையின் தடுப்பு மருந்துகள் பிரிவு இயக்குநர் டாக்டர் உதயா பாலசுப்ரமணியன் (வலமிருந்து 2}வது).
    விழாவில் ஆரோக்கிய உணவுகள் குறித்த கையேட்டை அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை இயக்கக அதிகாரி டாக்டர் வேங்கட சுரேஷ் வெளியிட அதனைப் பெற்றுக் கொள்கிறார், மருத்துவமனையின் தடுப்பு மருந்துகள் பிரிவு இயக்குநர் டாக்டர் உதயா பாலசுப்ரமணியன் (வலமிருந்து 2}வது).

இந்தியர்கள் தினமும் இரண்டு வேளைதான் உணவு உட்கொள்ள வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனையின் உடல்பருமன் சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் ராஜ்குமார் பழனியப்பன் தெரிவித்தார்.

உடல் பருமன் எதிர்ப்பு தினம், உடல்பருமன் சிகிச்சைத் துறையின் முதலாமாண்டு விழா ஆகியவை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் டாக்டர் ராஜ்குமார் பழனியப்பன் பேசியது:

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளால் உலகில் 30 சதவிதம் இறப்புகள் நிகழ்கின்றன. எனவே உடல் பருமன் என்பது எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டிய ஒரு பிரச்னையாகும்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஓராண்டில் 110 நபர்களுக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, கீல்வாதம், குழந்தையின்மை என உடல்பருமனுக்கு பல காரணங்கள் உள்ளன.

இந்த வகை அறுவை சிகிச்சைகள் அழகியல் சம்பந்தப்பட்டது என்ற எண்ணமே எல்லோரிடமும் உள்ளது. ஆனால் இது இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட பிரச்னை. இந்தியாவில் 2004-ஆம் ஆண்டு உடல் பருமன் அறுவை சிகிச்சைகள் அழகியல் காரணங்களுக்காவே நடைபெற்றது. ஆனால் 2006-ஆம் ஆண்டுதான் உடல் ரீதியான பிரச்னைகளுக்காக இந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ÷தற்போது நடைபெறும் அறுவை சிகிச்சைகளில் 20 சதவீதம் அழகியலுக்காகவும், 80 சதவிதம் வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்னைகளுக்காவும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியர்கள் இரண்டு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

அதில் 25 சதவிதம் மாவுச்சத்து, 50 சதவிதம் காய்கறிகள் மற்றும் பழங்கள் மீதம் 25 சதவிதம் புரதச்சத்து இருக்க வேண்டும். ÷உடல்பருமன் என்பதை ஒரு நோயாகக் கருத வேண்டும்.

இந்த பிரச்னைக்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என சுகாதாரத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உடல்பருமன் அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

News

Read Previous

தில்லியில் இம்மாதம் 30ம் தேதி எழுத்தாளர்கள் மாநாடு

Read Next

விவசாயக்கடன் பெற ஆர்வமில்லை முதுகுளத்தூர் “லோன் மேளா வெறிச்’

Leave a Reply

Your email address will not be published.