கர்ப்பிணி பெண்கள் நினைத்தால் ஸ்டெம்செல்( STEM CELL ) மூலம் புற்றுநோயாளிகளைக் காப்பாற்றலாம்!

Vinkmag ad

கர்ப்பிணி பெண்கள் நினைத்தால் ஸ்டெம்செல்( STEM CELL ) மூலம் புற்றுநோயாளிகளைக் காப்பாற்றலாம்!

ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்தி, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொது ரத்த வங்கியான ஜீவன் ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு 9 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.

ஸ்டெம்செல்சிகிச்சைஎன்றால்என்ன?

தொப்புள் கொடியை வெட்டியவுடன் அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மையான செல்களால் ஆனது. இதுதவிர தொப்புள் கொடியில் உள்ள திசுக்களிலும் சக்தி வாய்ந்த மெசன்கைமல் (mesenchymal) எனப்படும் செல்கள் உள்ளன. இவையே ஸ்டெம் செல்கள் எனப்படும் மூல செல்கள்.

இந்த மூல செல்களில் இருந்துதான், நம் உடல் உருவாகியுள்ளது.
உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் உருவாக அடிப்படையானது இந்த மூல செல்கள்.
தொப்புள் கொடி ரத்த திசுக்களில் உள்ள சக்தி வாய்ந்த செல்களைப் பாதுகாத்து
வைத்தால், பின்னாளில், உறுப்புகள் நோய்வாய்ப்படும்போது இவற்றைப்
பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

இந்தியா முழுவதும் 3 லட்சம் ரத்தப் புற்று நோயாளிகள் உள்ளார்கள் (ஆண்டுதோறும் புதிதாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்).
ரத்த சிவப்பணுக்கள் பாதிப்பால் ஏற்படுவது தலஸ்சீமியா. இந்த 2
பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு ஸ்டெம் செல் சிகிச்சை மட்டுமே.

ஆனால், தற்போது ஸ்டெம்செல்லைஇறக்குமதிசெய்து, சிகிச்சைசெய்துகொள்ள 25 லட்சரூபாய்ஆகிறது.
இதனால், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், சிகிச்சை பெற முடியாத நிலை
இருந்து வருகிறது. ஆனால், இந்த ஏழைகளுக்கு உதவ தமிழக அரசு ஒரு முற்போக்கான
நடவடிக்கையை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து
வரும் ரத்தவங்கியானஜீவன்வங்கிக்குஆண்டுக்கு 3 கோடிரூபாய்வீதம் 3 ஆண்டுகளுக்கு 9 கோடிரூபாய்நிதியுதவிவழங்கஉள்ளது.

ஒரு தொப்புள் கொடியைப் பெற்று, அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுத்து 24 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்போதைக்கு எங்களிடம் 750 ஸ்டெம் செல்கள்தான் பாதுகாக்க பொருளாதார வசதி உள்ளது. தமிழக அரசின் இந்த நிதி உதவியினால் 2014 ஜூன் மாதத்திற்குள் 7,500 ஸ்டெம் செல்கள் சேமிக்க திட்டமிட்டு உள்ளோம்.
சேமிக்கப்படும் ஸ்டெம்செல்லில் 75 சதவிகிதத்தைஅரசுபரிந்துரைக்கும்நோயாளிகளுக்கு, ஜீவன்ரத்தவங்கிஅளிக்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் மற்றும் தலஸ்சீமியா நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்கள் இலவசமாக வழங்கப்படும

மீதி 25 சதவிகிதம் நோயாளியின்     ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப 5 முதல் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய்
உள்ளவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் என்கிற கட்டண அடிப்படையில்
வழங்கப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம், ஸ்டெம் செல் சேமிப்பை  மேம்படுத்த பயன்படுத்தப்படும்”.

ஸ்டெம் செல் கிசிச்சை இலவசமாக மக்களுக்குக் கிடைக்க, ஒரு மாநில அரசு நிதியுதவி செய்வது இந்தியாவில் இதுதான் முதல்முறை. அமெரிக்கா,ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அரசுகள், இதுபோல நிதியுதவி செய்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல்.

ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் வேஸ்ட் என்று தூக்கிப் போடும் தொப்புள் கொடியை எங்களிடம் கொடுத்தால், இன்னொரு உயிரைக் காப்பாற்ற அதிலுள்ள ஸ்டெம் செல்கள் பயன்படலாம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கர்ப்பம் தரித்த 28-ஆவது
வாரத்தில் எங்களை தொடர்புகொண்டு பதிவு செய்தால் போதும். மற்ற நடைமுறைகளை
நாங்கள் பார்த்துக் கொள்வோம்என்கிறார், டாக்டர். சீனிவாசன்.

விவரங்களுக்கு : 044 – 28351200, 044 – 28150300 அல்லது [You must be registered and logged in to see this link.] (or) srinivasanjeevan.org.

கூடுதல் தகவல்களுக்கு,
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t34697-stem-cell#ixzz2XiW35Vgj
Under Creative Commons License: Attribution

 

News

Read Previous

தொப்பையை குறைக்க வழி

Read Next

சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளியின் பள்ளிப் பண்

Leave a Reply

Your email address will not be published.