வாய்ப்புண்

Vinkmag ad

வாய்ப்புண்

வாய்ப்புண்களால் தினமும் அவதிப் படுபவரா நீங்கள்?

அப்போ இத படிங்க முதலில்.

நான்கு முக்கிய காரணங்களால் வாய்ப்புண் வருகிறது.

1) Stress:

அதாவது மன அழுத்தம் அதனுடன் சேர்ந்து தூக்கமின்மை இவை இரண்டும் சேர்ந்து நம்முடைய நோய் எதிர்ப்பு திறனைக் குறைக்கிறது. அதனால் மிக அதிகமான எண்ணிக்கையில் Bacteria-க்கள் நம்முடைய வாயில் உருவாகக் காரணமாகிறது.

2) Riboflavin- அதாவது Vitamin b12 level நமது ரத்தத்தில் குறைவது.

3) இரும்புச் சத்து குறைபாடு.

4) வாய் சுத்தமின்மை.

இதை எப்படி கட்டுப்படுத்துவது என்றால்,

சூடான, காரமான உணவுப் பொருட்களைத் தவிர்க்க வைண்டும்.

Mouth ulcer வாய்ப்புண் வந்துச்சுண்ணா அது முமூமையா குணமாக ஒரு வாரம் ஆகும். Antibiotic Gel apply செய்வதால புண்கள் சீக்கிரம் ஆறும்.

Anasthetic Gel, அதாவது மறத்துப் போகச் செய்யும் மருந்து சாப்பிடுவதற்கு 10 நிமிடம் முன்பு Apply செய்யும் போது, நம் உணவுகளை நம்மால் வலியில்லாமல் சாப்பிட முடியும்.

சரி,இந்த வாய்ப்புண் வராமல் எப்படி பாதுகாப்பது?

Multi vitamins tablets,அதாவது Stress Related Anticipation நமக்கு 1 month later university exam.அல்லது முக்கியமான Commitments இருக்கும் போது அதை எதிர்பார்த்து நமக்கு மன உளைச்சல் ஏற்படும்.இந்த மாதிரியான சமயங்களில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே Multi vitamins tablets எடுக்கும் போது நாம் வாய்ப்புண் வருவதை தவிர்க்க முடியும்.

மேலும், Water saline,அதாவது மிதமான வெந்நீரில் ( Warm water) கொஞ்சம் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது சவ்வூடு பரவவல் நிகழ்வு மூலமாக உப்பு வாயின் உள்ளே உள்ள Bacterial growth முழுவதையும் மேலும் பரவாமல் தடுக்கின்றது.

Dr.Jaseema Yasmin B.D.S
Mob: 052 5384167

News

Read Previous

நேற்று, இன்று, நாளை !

Read Next

நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published.