தாய்ப்பாலின் சிறப்புகள்

Vinkmag ad

தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு :
*************************

குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

👍பசும்பாலை விட தாய்ப்பால் பாதுகாப்பானது, சுத்தமானது, சுகாதாரமானது, அதிகம் செலவில்லாதது, குழந்தைக்கு சரியான சூட்டில் கிடைக்கக்கூடியது

👍குழந்தைக்கு தேவையான முழுமையான உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதும்.கூடுதலாக ஒரு சொட்டு தண்ணீர் கூட தேவையில்லை

👍தாய்பாலில் கிருமிகளை எதிர்க்கவல்ல பல வேதியல் மற்றும் உயிர் வேதியல் பொருட்கள் உள்ளன. தாய்ப்பால் அளிக்கப்படும் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளை விட குறைவான அளவே வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்கள். ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் அளித்தால் வயிற்றுப்போக்கு வராது

👍எளிதாக சீரணமாகிறது – குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளால் கூட சீரனிக்க வல்ல உணவு தாய்ப்பாலே

👍தாய்க்கும் சேய்க்கும் இடையில் பந்தத்தை ஏற்படுத்துகிறது
குழந்தையின் வாய், உதடு, தாடை ஆகிய உறுப்புகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் அளிப்பது முக்கியம்

👍குழந்தை அதிக எடை பெறுவதை தாய்ப்பால் தடுக்க வல்லது
குழந்தை எடை குறைந்து சவலை குழந்தையாவதையும் தாய்ப்பால் தடுக்க வல்லது

👍குழந்தையில் இரத்ததில் கால்சியம், மக்னீசியம் போன்ற தாது பொருட்கள் சரியான அளவில் இருப்பதற்கு தாய்ப்பால் உதவுகிறது

👍குடும்ப கட்டுப்பாட்டில் உதவுகிறது

தாயின் கர்ப்பப்பை விரைவில் சுருங்கி, அறுவை சிகிச்சை செய்திருந்தால் அந்த புண் விரைவில் ஆற உதவுகிறது

👍ஒரு நாள் எவ்வளவு அளிக்க வேண்டும்
450 முதல் 600 மிலி வரை சரியான அளவு என்று கருதப்படுகிறது

👍எத்தனை மாதங்கள் வரை
18 மாதங்கள் வரை அளிக்கலாம்
முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே போதும்

👍சிசேரியன் செய்தாலும் அளிக்கலாமா
தாயின் கர்ப்பப்பை விரைவில் சுருங்கி, அறுவை சிகிச்சை செய்திருந்தால் அந்த புண் விரைவில் ஆற உதவுகிறது

👍பால் குறைவாக வந்தால் என்ன செய்ய வேண்டும்
தாய் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும்

👍தாய்ப்பால் அளவை அதிகரிக்க முடியுமா
தாய் போதிய அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம், தாய் தினமும் 4 முதல் 6 கப் பசும்பால அருந்துவதன் மூலம் குழந்தைக்கு போதிய அளவு பால் கிடைக்கும்

👍6 மாதங்களுக்கு பிறகு என்ன அளிக்க வேண்டும்
6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலை நிறுத்த கூடாது. தாய்ப்பாலுடன் கூடவே பசும்பாலை வழங்க வேண்டும். இப்படியாக படிப்படியாக ஒவ்வொரு பொருட்களாக கூட்டிக்கொண்டு வந்து படிப்படியாக 12 முதல் 18 மாதங்கள் வரை தாய்ப்பாலை மெதுவாக நிறுத்தலாம்

👍வேலைக்கு போகும் பெண்கள் ??
காலை, மாலை, இரவு தாய்ப்பால் அளிக்கலாம்
பிற நேரங்களின் பாலை பீய்ச்சி எடுத்து (6 மணி நேரம் வரை) குளிர்சாதன கருவியில் (பிரிட்ஜ்) வைத்து குழந்தைக்கு அளிக்கலாம்.!

👍லாக்டோஜன் போன்ற பொருட்கள்
கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். “ காசுக்கு வந்த கேடு” சொல்வார்களே.. அதற்கு ஏற்ற உதாரணம் இது போன்ற பொருட்கள் தான். காசு போனால் கூட பரவாயில்லை. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வர முக்கிய காரணமே இது போன்ற செயற்கை உணவுகள் தான்.!!

Breast feeding

#Awareness

Dr. Mariano Anto Bruno Mascarenhas 😍

News

Read Previous

கற்பாறைக்குள் கருணை

Read Next

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்புகள்

Leave a Reply

Your email address will not be published.