துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்புகள்

Vinkmag ad

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்புகள்

“அதிகாலையின் மீது சத்தியமாக மேலும் பத்து இரவுகளின் மீது சத்தியமாக” என்று 89:01ம் அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நம்மை படைத்த இறைவன் அந்த பத்து நாட்களை முன்னிறுத்தி அதிலே தனது சத்தியத்தை கூறி இந்த நாட்களை கண்ணியப்படுத்துகிறான்

இந்த பத்து நாட்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: “ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள், யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர என்று கூறினார்கள். (புஹாரி-969, திர்மிதி-688)

தனிப்பட்ட விசேட அமல்கள் இல்லா விட்டாலும் வழமையாக நாம் செய்து வரும் அமல்களை பூரணமாகவும், சரியாகவும் செய்து வர முயற்சி செய்ய வேண்டும். பர்ளான தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுது வருவது. பர்ளுடைய முன்-பின் ஸுன்னதுக் களை பேணித் தொழுது வருவது, தொழுகைக்குப் பின் ஓதக் கூடிய அவ்ராதுகளை சரியாகத் தொடராக ஓதி வருவது, காலை-மாலை நேரங்களிலும், ஓய்வு கிடைக்கும் போதும் குர்ஆனை ஓதிக் கொள்வது நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துகளை ஓதிக் கொள்வது குறிப்பாக அந்த பத்து நாட்களிலும் பாவமான விடயங்களை விட்டும் ஒதுங்கி நல்லறங்கள் செய்வதில் தங்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே மேற்சென்ற குர்ஆன் வனத்தின் மூலமும், ஹதீஸின் மூலமும் துல்ஹஜ் மாதத்தின் முதற் பத்து நாட்கள் மிகவும் சிறப்புக்குரியது. அந்த நாட்களில் அமல்கள் செய்வதை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் அரபா நோன்பை பிடிக்கிறாரோ அவர் ஒரு வருட முன் செய்த பாவத்தையும் பின் ஒரு வருட பாவத்தையும் (அல்லாஹ்) மன்னிக்கிறான்.” (முஸ்லிம்)

துல்ஹஜ் மாதத்தின் 10ம் நாள் ஹஜ் பெருநாளாகும். அன்றைய நான் சிறப்புக்குரிய நாளாகும். குறிப்பாக பெருநாள் தொழுகையை தொழுது விட்டு அல்லாஹ் விற்காக குர்பான் கொடுப்பதின் மூலம் இன்னும் அன்றைய தினம் இதன் மூலம் அமல்கள் அலங்கரிப்படுகிறது. அந்த இறைச்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் சந்தோசமாக அன்றைய நாளை கழிப்பதற்கு அமைந்து விடுகிறது. மேலும் அந்த 10ம் நாள் அதிகாலையிலிருந்து தக்பீர், தஹ்லீல், தஸ்பீஹ் போன்ற திக்ருகளை செய்வதின் மூலம் அதிகமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

News

Read Previous

தாய்ப்பாலின் சிறப்புகள்

Read Next

திப்புசுல்தான் எனும் மாவீரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *